ETV Bharat / state

குடிநீர் குழாய் கொண்டுசெல்ல எதிர்ப்புத் தெரிவித்து பாதையை அடைத்த தனி நபர் - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

நாகப்பட்டினம்: குடிநீர் குழாய் கொண்டுசெல்ல எதிர்ப்புத் தெரிவித்து பாதையை தனிநபர் அடைத்ததால், பொதுமக்கள் சிரமம் அடைந்துவருகின்றனர்.

குடிநீர் குழாய் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பாதையை அடைத்த தனி நபர்

author img

By

Published : Mar 9, 2021, 5:45 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அடுத்த மடப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மடப்புரம் ஊராட்சி மன்றத் தலைவியாக இருந்துவருகிறார்.

இவர்கள் வசிக்கும் பகுதிக்கு கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின்கீழ் கடந்த வாரம் வாழக்கரையிலிருந்து குடிநீர் குழாய் பதிக்கும் பணி தொடங்கியது.

இதற்கு அதே பகுதியைச் சேர்ந்த சபாநாதன் என்பவர் எதிர்ப்புத் தெரிவித்தார். இது தொடர்பாக திருக்குவளை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் ரமேஷ் உள்பட 7 குடும்பத்தினர் பயன்படுத்திவந்த பாதையை சபாநாதன் கம்பி வேலி கொண்டு அடைத்தார். இதனால் அவர்கள் வெளியே செல்ல முடியாமலும், குடிநீர் இன்றியும் சிரமம் அடைந்துவருகின்றனர்.

அவர்கள் பட்டியலின மக்கள் என்பதால் சபாநாதன் கம்பி வேலி கொண்டு அடைத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து திருக்குவளை காவல் துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

மேலும் கம்பி வேலியால் அடைக்கப்பட்ட இடம் தன்னுடையது என சபாநாதன் காவல், வருவாய் ஆகிய அலுவலர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது இந்தப் பிரச்சினை தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் சாதி சான்றிதழை ஆய்வு செய்யப்படுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.