மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றிய கவுன்சிலர் ஒன்றாவது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட எமிமாள், அவரது கணவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மறு வாக்கு எண்ணிக்கை செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றாவது வார்டு வாக்கு எண்ணிக்கை பணி நேற்று காலை 11 மணியளவில் முடிவடைந்த நிலையில், இரவு 8 மணிவரை வெற்றிபெற்ற வேட்பாளர் குறித்தும், முன்னிலை குறித்தும் எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பின், நள்ளிரவில் திமுக வேட்பாளர் ஸ்ரீமதி வெற்றிபெற்றதாக அறிவித்துள்ளனர்.
வாக்குப் பெட்டிகள் வேட்பாளர்கள், முகவர்கள் இல்லாமல் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டிய அவர்கள், ஒன்றாவது வார்டில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் நடப்பதை அறிந்து தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் புகாரை பெற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி - ஜோதிமணி எம்.பி தர்ணா