வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து, தற்போது ஃபானி புயலாக மாறியுள்ளது. சென்னைக்கும் தென்கிழக்கே சுமார் 1250 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ள இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
ஃபானி புயல் வலுவடைந்து வருவதன் காரணமாக நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் இன்று 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கையினால், நாகை, கோடியக்கரை, வேதாரண்யம், தரங்கம்பாடி, பழையார், திருமுல்லைவாசல் உள்ளிட்ட கடற்பகுதியில் கடல் கொந்தளிப்பு அதிகரித்துள்ளதால், மீனவர்களின் படகுகள் அனைத்தும் அந்தந்த துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.