கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால், கடந்த 40 நாட்களுக்கும் மேல் பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் தமிழ்நாடு முழுவதும் இன்று திறக்கப்பட்டுள்ளது. இதில் சமூக இடைவெளியை கடைபிடித்து மதுபானங்களை வாங்கிச் செல்வதற்கு, பல்வேறு கட்டுப்பாடுகளை காவல் துறையினர் விதித்துள்ளனர்.
அந்த வகையில், நாகை மாவட்டம் - மயிலாடுதுறையில் மது விற்பனை காலை 10 மணிக்குத் தொடங்கியது. மதுபானம் வாங்க வரும் குடிமகன்கள் 200 மீட்டருக்கும் முன்னால் தடுப்புகள் அமைத்து, தடுத்து நிறுத்தப்பட்டு, சமுதாய இடைவெளியுடன் மது வாங்க காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மது வாங்க வருபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனவும்; அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு குவார்ட்டர் மது பாட்டில்கள் நான்கு மட்டுமே வழங்கப்படுகிறது. தற்போது 100க்கும் மேற்பட்டோர் வரிசையில் சமுதாய இடைவெளியுடன் நின்று, மது வாங்கிச் செல்கின்றனர்.
இதையும் படிங்க...விசாகப்பட்டினம் வாயு கசிவு: தகவல்கள் உடனுக்குடன்