ETV Bharat / state

ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு- ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! - காட்டுச்சேரி ஊராட்சி

Student died in race track CM has ordered a compensation of 3lakh rupees to his family: மயிலாடுதுறையில் நடைபெற்ற மண்டல அளவிலான ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற தனியார் பள்ளி மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இறந்த மாணவனின் குடும்பத்திற்கு மூன்று இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 12:12 PM IST

Updated : Aug 25, 2023, 3:29 PM IST

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுக்கா கருவிழந்தநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி சரவணன். இவரது மனைவி நித்தியா. இவர்களது மகன் ரிஷி பாலன் (வயது 17). இவர் செம்பனார்கோவில் தாமரை மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். காட்டுச்சேரி ஊராட்சி சமத்துவபுரம் விளையாட்டு மைதானத்தில் மண்டல அளவிலான தடகள விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

  • மயிலாடுதுறை மாவட்டத்தில் விளையாட்டு போட்டியின் போது உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/qbOOu6GRJb

    — CMOTamilNadu (@CMOTamilnadu) August 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இப்போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் மாணவன் ரிஷி பாலனும் கலந்து கொண்டார். 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓடிய மாணவன் ரிஷி பாலன், மயங்கி சுருண்டு விழுந்துள்ளார். இதனால் உடனடியாக ரிஷி பாலனை பொறையார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரிஷி பாலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்து வந்த மாணவனின் தாயார் மற்றும் உறவினர்கள் மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காமல் காலதாமதம் செய்து அலட்சியப்படுத்தியதால் மாணவன் ரிஷி பாலன் உயிரிழந்து விட்டதாக குற்றம் சாட்டி உள்ளனர். இந்த விளையாட்டுப் போட்டியை துவங்கி வைக்க கல்வித்துறை அதிகாரிகள் 3 மணி நேரம் தாமதமாக வந்ததாகவும், மாணவன் ரிஷி பாலன் மதியம் மூன்று மணிக்கு மயங்கி விழுந்ததாகவும், ஆனால் மாணவனை மாலை 6 மணிக்கு பொறையார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் மாணவனின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் மாணவன் மயங்கிய சம்பவம் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று மாணவனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொறையார் காவல் நிலையத்தில் மாணவனின் தாய் நித்தியா புகார் அளித்துள்ளார். அதில் மாணவன் மயங்கி விழுந்தவுடன் முதலுதவி சிகிச்சை செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தால் உயிர் பிழைத்திருப்பான் என்றும், மாணவனின் உயிரிழப்பிற்கு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் காரணம் என்றும், அனைவரின் பொறுப்பின்மையால் மாணவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் தனது மகனுக்கு ஏற்பட்ட நிலைமை இனி தமிழ்நாட்டில் ஒருவருக்கும் ஏற்படக் கூடாது என்று கண்ணீர் மல்க மாணவனின் தாயார் நித்தியா நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை புரிந்த நேரத்தில் விளையாட்டுப் போட்டியில் மாணவன் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பொறையார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவனின் உடல், உடற்கூறு ஆய்விற்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் மாணவனின் குடும்பத்திற்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆன்மீக ஆட்சிதான் நடக்கிறது - தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம்

Last Updated : Aug 25, 2023, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.