நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, நாகூர், திட்டச்சேரி, சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த 38 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து அவர்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நாகை மாவட்டம் முழுவதும் கரோனா நோய் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும், கரோனா நோய் தடுப்புப் பணிகள் குறித்து தஞ்சை மண்டல கரோனா நோய் தடுப்பு ஐ.ஜி. சாரங்கன் நேற்று (ஏப்ரல் 15) நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காவலர் குடியிருப்பு பகுதி, பாதிக்கப்பட்டவர்கள் வசித்த தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேக்கொண்டார்.
அதையடுத்து அவர் கரோனா தடுப்பில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வில் டி.ஐ.ஜி. லோகநாதன் உள்ளிட்ட காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'அவர்களின் தியாகத்தை நாம் மறந்து விடக் கூடாது' - தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி