ETV Bharat / state

வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தந்தால் பாலியல் தொழிலிலிருந்து விலகிக்கொள்கிறோம் - திருநங்கைகள் வாக்குறுதி - நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகப்பட்டினம்: வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தாருங்கள் பாலியல் தொழிலில் இருந்து விலகிக் கொள்கிறோம் என திருநங்கைகள் வாக்குறுதி அளித்துள்ளனர்.

வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தாருங்கள் பாலியல் தொழிலில் இருந்து விலகிக் கொள்கிறோம் - திருநங்கைகள்

author img

By

Published : Sep 18, 2020, 1:56 AM IST

நாகப்பட்டினம் மாவட்ட புறவழிச்சாலையில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்களிடமிருந்து தொடர் புகார் எழுந்து வந்தது.

அதனடிப்படையில் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து கூட்டம் ஒன்றை நடத்தினார். முன்னதாக கூட்டத்தில் சமூக நலத்துறை சார்பாக திருநங்கைகளுக்கு உள்ள அரசு சலுகைகள் குறித்து சமூக நலத்துறை அலுவலர் உமையால் திருநங்கைகளுக்கு எடுத்துக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பொதுமக்களுக்கு தொல்லை தரும் வகையில் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டாம் எனவும், இதனால் இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் சீர்கெட்டு வருவதாக இளைஞர்களின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய நபர்களால் உங்களுக்கு அச்சுறுத்தல் வரவும் வாய்ப்பு இருக்கிறது.

ஆகையால் இதுபோன்ற பிரச்னைகள் வராதவாறு நீங்கள் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டாமெனவும், இதனால் பல்வேறு நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது என்றும், ஆகையால் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் கல்வி தகுதிகள் அடிப்படையில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் வாயிலாக வழிவகை செய்வதற்கு ஏற்பாடு செய்வதாகவும் திருநங்கைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார்.

அப்போது கூறிய திருநங்கைகள், தங்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக, வேலைவாய்ப்பு மற்றும் இருப்பிடம் இந்த இரண்டு கோரிக்கையையும் நிறைவேற்றும் பட்சத்தில் நாங்கள் முழுமையாக பாலியல் தொழிலில் இருந்து விலகிக்கொள்வோம் என உறுதியளித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.