நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் த.ஜெயராமன் இது குறித்து கூறியதாவது,
"தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் மத்திய அரசு ஓ.என்.ஜி.சி., வேதாந்தா நிறுவனங்களுக்கும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் ஆய்வு அனுமதியை வழங்கியுள்ளது.
இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டிய தமிழ்நாடு அரசு மவுனம் சாதிக்கிறது, மத்திய மாநில அரசுகளின் இந்தப் போக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு ஏமாற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழ்நாடு அரசு நிராகரிப்பதாக உடனடியாக அறிவிக்க வேண்டும். காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்.
மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் பொதுக்குழு மே 19ஆம் தேதி ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்க இருக்கிறது. பொதுக்குழுவில் போராட்ட வடிவங்கள் தீர்மானிக்கப்படும்" என அவர் தெரிவித்தார்