ETV Bharat / state

5 மாதத்தில் கசந்த காதல்: தந்தையுடன் சேர்ந்து கணவனைத் தீர்த்துக்கட்டிய மனைவி! - murder

நாகை: திருமணம் முடிந்து ஐந்து மாதங்களே ஆகியுள்ள நிலையில், காதல் கணவனை தந்தையுடன் சேர்ந்து மனைவியே தீர்த்துக் கட்டியுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சதீஸ்குமார்
author img

By

Published : May 13, 2019, 8:19 PM IST

Updated : May 13, 2019, 9:20 PM IST

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவை அடுத்த தலச்சங்காடு ஊராட்சி அருகே உள்ள தலையுடையார் கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஸ்குமார். இவருக்கு வயது 30. இவர் கலைமதி (28) என்பரை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்து சுமார் ஐந்து மாதங்களே ஆகின்ற நிலையில் திருமணம் ஆனது முதல் சதீஸ்குமாரும், கலைமதியும் தனியாக தலச்சங்காட்டில் வசித்து வந்துள்ளனர்.

ஆனால், சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி கலைமதி தனது கணவர் சதீஸ்குமாருடன் தகராறு செய்துவிட்டு தனது தந்தை வீட்டிற்கேச் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. மேலும், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவருடன் வாழவிரும்பவில்லை எனவும் கலைமதி புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நாகை, கணவர், மனைவி, மாமனார்,
சதீஸ்குமார், கலைமதி

இந்நிலையில், சதீஸ்குமார் அப்பராசபுத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, அவரது மனைவி கலைமதி அவரைப் பார்க்க, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சதீஸ்குமாரை அவரது மனைவி கலைமதி கல்லால் அடித்துள்ளார். இதில் சதீஸ்குமார் மயங்கியதையடுத்து, அங்கு வந்த சதீஸ்குமாரின் மாமனார் நாகராஜ், அவரின் கையில் வைத்திருந்த கத்தியால் சதீஸ்குமாரின் தொடையில் குத்தி கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இதனைக்கண்ட ஊர்மக்கள், சதீஸ்குமாரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து பொறையார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சதீஸ்குமாரின் மனைவி கலைமதி, அவரது தந்தை நாகராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை                           ஆர்.செல்லப்பா                                      13.05.19 

மாவட்டம் : நாகை 

செல்: 7339283771

           அப்பராசபுத்தூரில் கணவனை, மனைவி கல்லால் அடித்தும், மாமனார் கத்தியால் குத்தியும் கொலை இருவரும் கைது, பொறையார் போலிசார் விசாரணை.

           நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தலச்சங்காடு ஊராட்சி தலையுடையார்கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் சதீஸ்குமார் வயது (30) இவர் வெளிநாட்டில் ஓட்டுநராக பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அருகில் உள்ள அப்பராசபுத்தூரை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் கலைமதி வயது (28) என்பரை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணம் ஆகி சுமார் 5 மாதங்களே ஆகிறது, இந்நிலையில் திருமணம் ஆனது முதல் சதீஸ்குமாரும், கலைமதியும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தலச்சங்காட்டில் வசித்து வந்துள்ளனர். ஆனால் சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 14 ந் தேதி கலைமதி தனது கணவர் சதீஸ்குமாருடன் தகராறு செய்துவிட்டு தனது தந்தை வீட்டிற்கே அப்பராசபுத்தூருக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் கலைமதி மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவருடன் வாழவிரும்பவில்லை என புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் சதீஸ்குமார் தலச்சங்காட்டு தலையுடையார் கோவில்பத்தில் உள்ள தனது தந்தை ராஜாராமன் வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று தனது தந்தையிடம் வயலுக்கு டீசல் வாங்க செல்வதாக கூறி சென்றுள்ளார். போகும் வழியில் அப்பராசபுத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். சதீஸ்குமார் சென்றபோது அவரது மனைவி கலைமதி அவரை பார்க்க இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் சதீஸ்குமாரை அவரது மனைவி கலைமதி கல்லால் அடித்துள்ளார். இதில் சதீஸ்குமார் மயங்கியநிலையில் அங்கு வந்த சதீஸ்குமாரின் மாமனார், நாகராஜ் தனது கையில் வைத்திருந்த கத்தியால் சதீஸ்குமாரை அவரது தொடையில் குத்தி கடுமையாக தாக்கியுள்ளார். இதனை கண்ட ஊர் மக்கள் சதீஸ்குமாரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் சதீஸ்குமார் உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து பொறையார் போலிசார் வழக்குபதிவு செய்து சதீஸ்குமாரின் மனைவி கலைமதி மற்றும் அவரது தந்தை நாகராஜையும் கைது செய்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். டீசல் வாங்குவதற்காக தன் மகன் கொலை செய்யப்பட்டது குறித்து அவரது பெற்றோருக்கு தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். தலச்சங்காடு கிராமமே சோகத்தில் உள்ளது.

 பேட்டி: கோமதிசதீஸ்குமார் தாய்தலச்சங்காடு.

Last Updated : May 13, 2019, 9:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.