நாகப்பட்டினம் மாவட்டம் அந்தணப்பேட்டை அருகில் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர்கள், பழனிவேல் (55) - ராஜலட்சுமி (50) தம்பதி.
இன்று (அக்.19) காலை ராஜலெட்சுமி அவரது வீட்டின் கொள்ளை புறத்தில் சமையலுக்கான வேலைகளை செய்துகொண்டிருந்தார். அப்போது அவர்கள் வீட்டருகிலிருந்த உயர் மின்னழுத்த கம்பி அறுந்து கொள்ளை புறத்தில் விழுந்துள்ளது.
அறுந்து விழுந்த உயரழுத்த மின் கம்பி
அறுந்து விழுந்த வயரை ராஜலட்சுமி வெளியில் தூக்கிவீச முயன்றபோது மின்சாரம் தாக்கியது. சத்தம் கேட்டு ஓடிவந்த கணவர் பழனிவேல் மனைவியைக் காப்பாற்ற முயன்றபோது அவரையும் மின்சாரம் தாக்கியது.
இதில் கணவன், மனைவி இரண்டுபேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கணவன், மனைவி உயிரிழப்பு
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர் இருவரது சடலங்களை மீட்டு உடற்கூராய்விற்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த மின்விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் 10 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்: ஒருவர் வெட்டிக் கொலை