ETV Bharat / state

சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த உணவகத்திற்குச் சீல்வைப்பு - mayiladuthurai news

மயிலாடுதுறையில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த உணவகத்திற்குச் சீல்வைத்தனர்.

உணவகத்திற்கு சீல்  சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்  மயிலாடுதுறையில் சீல் வைக்கப்பட்ட உணவகம்  அபராதம்  உணவகத்திற்கு அபராதம்  food safety officer  hotel seal  hotel sealed in mayiladuthurai  hotel sealed in mayiladuthurai by food safety officer  mayiladuthurai news  grand inn hotel sealed
உணவகத்திற்கு சீல்
author img

By

Published : Sep 24, 2021, 10:05 AM IST

மயிலாடுதுறை: உணவகங்களில் காலாவதியான உணவுப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அசைவ உணவகங்களில் தரமற்ற இறைச்சி பயன்படுத்தப்படுவதாகவும் மயிலாடுதுறை நகராட்சிக்குத் தகவல் வந்துள்ளது.

இதையடுத்து நகராட்சி ஆணையர் பாலு தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன், நகர்நல அலுவலர் மலர்மன்னன் உள்பட சில அலுவலர்கள் இணைந்து மயிலாடுதுறை பேருந்து நிலையம், காந்திஜி சாலை, கூறைநாடு, ஸ்டேட் பேங் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள தேநீர்க்கடைகள், குளிர்பான கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

உணவகத்திற்குச் சீல்வைப்பு

பின்னர் அங்கு காலாவதியான குளிர்பானங்கள், தின்பண்டங்களைப் பறிமுதல்செய்து அபராதம் விதித்தனர். இந்தச் சோதனையில் பல்வேறு உயர்தர அசைவ உணவகங்களில் சோதனை செய்தபோது காலாவதியான சிக்கன், மட்டன், மீன், இறால் போன்றவை குளிர்பதன பெட்டியில் இருப்புவைத்து சூடுபடுத்தப்பட்டு பரிமாறப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து, தரமற்ற இறைச்சியைப் பறிமுதல் செய்தனர். ஒரு அசைவ உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் கூடம் இருந்ததால், அந்த உணவகத்தையே பூட்டி சீல்வைத்தனர்.

கெட்டுப்போன அசைவ உணவுகள், கடைகளில் காலாவதியான தின்பண்டங்களை வைத்திருந்ததற்காகப் பல்வேறு அசைவ உணவகங்கள், கடைகளுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

பறிமுதல்செய்யப்பட்ட உணவுகளின் மீது பினாயில் உள்ளிட்ட ரசாயனங்களை ஊற்றி உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் அழித்தனர். இதுபோன்று தொடர்ந்து சோதனை நடைபெறும் என்றும், தரமான உணவுகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உணவக உரிமையாளர்களுக்கு நகராட்சி ஆணையர் எச்சரிக்கைவிடுத்தார்.

இதையும் படிங்க: மாணவிக்கு கத்திக்குத்து: காதலன் தற்கொலை முயற்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.