தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்யத்தொடங்கியுள்ளது.
பருவமழை தொடங்குவதற்கு முன்னரே, மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்துவருகிறது.
மயிலாடுதுறை, சீர்காழி, மணல்மேடு, குத்தாலம், மங்கைநல்லூர், செம்பனார்கோவில், தரங்கம்பாடி, திருக்கடையூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழையும் ஒருசில இடங்களில் பலத்த மழையும் பெய்துவருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படியுங்க: