ETV Bharat / state

வாழை உள்ளிட்ட பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாழை, மிளகாய், கத்தரி உள்ளிட்ட தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் அழுகத் தொடங்கியுள்ளன. வருவாய் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனைத் தெரிவித்தனர்.

Heavy
Heavy
author img

By

Published : Nov 13, 2022, 7:43 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

கீழையூர், கிடாரங்கொண்டான், பொன்செய், திருச்சம்பள்ளி, பல்லகொல்லை, ஆறுபாதி, விளநகர் உள்ளிட்ட பகுதிகளில், 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை, மிளகாய், கத்தரி உள்ளிட்ட பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன.

ஒன்று முதல் 3 அடி உயரம் வரை உள்ள வாழைக்கன்றுகள் மழைநீரில் மூழ்கியுள்ளன. கன்றுகளின் வேர்ப்பகுதி ஒரு வாரமாக தண்ணீரிலேயே இருப்பதால் வேர் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் கத்திரி, மிளகாய் போன்ற பயிர்களும் கடந்த ஒரு வாரமாக மழை நீரில் மூழ்கியுள்ளன.

சுமார் 6 மாதங்களில் மகசூலைத் தரும் இந்த பயிர்கள், தற்போது மூன்று மாதங்களிலேயே அழுகிவிட்டதாகவும், வாழைக்கு ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாயும், மிளகாய், கத்திரி, கிழங்கு பயிர்களுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு மேலும் செலவு செய்துள்ள நிலையில், இப்போது மகசூலும், வருவாயும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனைத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Rain Update: 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.