ETV Bharat / state

அனுமன்‌ ஜெயந்தி: புகழ்பெற்ற அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு - அனுமன்‌ ஜெயந்தி

மயிலாடுதுறையில் அனுமன்‌ ஜெயந்தியை முன்னிட்டு ராமாயணத்துடன் நேரடி தொடர்பு கொண்ட புகழ்பெற்ற அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

அனுமன்‌ ஜெயந்தி சிறப்பு வழிபாடு
அனுமன்‌ ஜெயந்தி சிறப்பு வழிபாடு
author img

By

Published : Dec 23, 2022, 2:09 PM IST

அனுமன்‌ ஜெயந்தி சிறப்பு வழிபாடு

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா அனந்தமங்கலம் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா இன்று (டிச. 23) நடைபெற்றது. இக்கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சநேயர் மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும், அந்தக் கரங்களில் எல்லாம் சங்கு சக்கரம், வில், அம்பு, சூலம் போன்ற ஆயுதங்களை ஏந்தி, முதுகின் இருபக்கமும் கருடனுக்குரிய சிறகுகளோடு காட்சித் தருகிறார். இதுபோன்ற ஆஞ்சநேயர் திருமேனி இங்கு மட்டுமே உள்ளது.

மேலும் தனிச்சிறப்பாக அனந்தமங்கலம், ராமாயணத்துடன் நேரடி தொடர்பு கொண்டது. ஆஞ்சநேயர் இலங்கையில் உள்ள அரக்கர்களை சம்ஹாரம் செய்தார். பின்னர் திரும்பி வரும் வழியில் கடலோரம் இயற்கைச் சூழ்ந்த இடத்தில் இறங்கி, ஆனந்தமாய் தங்கியிருந்த இடம்தான் இந்தத் தலம். அதனாலேயே இது ஆனந்தமங்கலம் என்று அழைக்கப்பட்டு, தற்போது மறுவி அனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது என்பது தலவரலாறு.

எனவே, இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டாலே சிவன், திருமால், பிரம்மா, ஸ்ரீராமர், இந்திரன், ருத்ரன், கருடாழ்வார் ஆகிய அனைவரையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு மிக்க கோயிலுக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து வழிபாடு செய்வார்கள்.

இந்நிலையில், அனந்தமங்கலம் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் இன்று அனுமன் ஜெயந்தி விழா விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி ஆஞ்சநேய சுவாமியை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து பால், இளநீர், சந்தனம் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து ஆஞ்சநேய சுவாமிக்கு துளசி, வெற்றிலை, எலுமிச்சை மற்றும் வடைகளால் மாலைகள் அணிவித்து பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலையில் அலங்காரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.