ETV Bharat / state

கோபாலபுரம் கோமானின் மகன் முக.ஸ்டாலினுக்கு ஏழைகளின் தேவைகள் புரியாது - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

author img

By

Published : Jan 4, 2021, 1:08 PM IST

நாகப்பட்டினம்: கோபாலபுரம் கோமானின் மகனான முக.ஸ்டாலினுக்கு ஏழைகளின் தேவைகள் புரியாததால் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்துள்ள அற்புதமான அம்மா மினி கிளினிக் திட்டத்தை ஏளனப்படுத்துகிறார் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

Minister OS Maniyan
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிடைக்கழி ஊராட்சியில் முதலமைச்சரின் ‘அம்மா மினி கிளினிக்’ திறப்புவிழா மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்றது.

இதில், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்று, அம்மா மினி கிளினிக்கை திறந்துவைத்து சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது:- திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கோபாலபுரம் கோமானின் மகன். அவருக்கு ஏழைகளின் சங்கடங்கள் தெரியாது.

கிராமப்புற மக்களின் தேவைகள் அவருக்கு புரியாது. எனவேதான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்துள்ள அற்புதத் திட்டமான அம்மா மினி கிளினிக் திட்டத்தை ஏளனப்படுத்துகிறார்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு. எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது ஆ.ராசா பிறக்கவில்லை. எனவே எம்ஜிஆரின் சாதனைகள் குறித்து அவருக்கு தெரியாது.

மு.க ஸ்டாலினுக்கு தமிழே சரியாக பேசத் தெரியவில்லை. கணக்கும் புரிவதில்லை. என்ன பேசுகிறோம் என்ற நிதானம் இல்லாமல் பேசுகிறார். இந்தியாவில் உள்ள நூற்பாலைகளில் 61 சதவீத நூற்பாலைகள் தமிழ்நாட்டில் உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள நூற்பாலைகளுக்கு தேவையான பருத்தியில் ஐந்து விழுக்காடு தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. மீதம் தேவைப்படும் 95 விழுக்காடு பருத்தி வடமாநிலங்களில் இருந்தே கொள்முதல் செய்யப்படுகிறது. பருவமழை பொய்த்தாலே, அதிக மழை பெய்தாலோ கொள்முதல் விலையில் மாற்றம் ஏற்படுவது சகஜம். இயற்கை இடர்பாட்டால் விலை ஏற்றம் ஏற்பட்டபோதும் ஒரு நூற்பாலைக்கூட நின்றுவிடாமல் தமிழ்நாடு அரசு காப்பாற்றியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் அடுக்கடுக்கான வாக்குறுதிகளை அளித்துதான் திமுக வெற்றி பெற்றது. ஆனால் அதன்பின் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தற்போது, கிராமசபைக் கூட்டங்களில் மக்களிடம் மனுக்களை பெறுகிறார்.

அதனை எங்கு கொண்டு கொடுப்பார். எது பேப்பர் தின்னுமோ அங்கு சென்று கொடுப்பாரா? திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, மக்களை நம்ப வைத்து ஏமாற்றி வாக்குகளை பறிக்க திட்டமிடுகிறது.

இவ்வாறு அமைச்சர் ஓ எஸ் மணியன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ், அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.