ETV Bharat / state

தனியார் பள்ளியில் தாத்தா - பாட்டி தினம் கொண்டாட்டம்! - Mayiladuthurai

சீர்காழியில் உள்ள தனியார் பள்ளியில் தாத்தா - பாட்டி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் "நாங்கள் உங்களை காப்பதாக சபதம் ஏற்கிறோம்" (We vow to shield you) என்ற வாசகத்தில் அமர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தனியார் பள்ளியில் தாத்தா பாட்டி - தினம் கொண்டாட்டம்

author img

By

Published : Feb 11, 2023, 11:46 AM IST

தனியார் பள்ளியில் தாத்தா - பாட்டி தினம் வெகு விமர்சையாக கொண்டாட்டப்பட்டது

மயிலாடுதுறை: சீர்காழியில் சபாநாயகர் முதலியார் இந்து மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பத்தாவது ஆண்டு தாத்தா பாட்டி தினம் வெகு விமர்சையாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. முதலாவதாகப் பாட்டிகளுக்கான கோலப்போட்டி நடைபெற்றது, இப்போட்டியில் பாட்டிக்கு உதவியாகப் பேத்திகளும் பங்கு பெற்றனர்.

மத நல்லிணக்கத்தைக் காப்போம், தாத்தாவைவிடச் சிறந்த ஆசிரியர் இல்லை, பாட்டியை விடச் சிறந்த மருத்துவர் இல்லை, எங்களால் நீங்கள் என்றும் உங்களுடன் இருப்போம் என வசகங்களை எழுதிக் கோலமிட்டனர். மேலும் தாத்தாக்களுக்கான அம்பு எறிதல் போட்டியில் கலந்து கொண்ட தாத்தாக்களை உற்சாகப்படுத்தும் வகையில் மைதானத்தில் அமர்ந்திருந்த மாணவ,மாணவிகள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற தாத்தா, பாட்டிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, தாத்தா பாட்டிகளுடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வாழ்வோம் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, "நாங்கள் உங்களைக் காப்பதாகச் சபதம் ஏற்கிறோம்" என எழுதப்பட்ட எழுத்துகளில் மாணவ மாணவிகள் அமர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த விழாவில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'பேனா'வை உங்களுக்கு தெரியும்! - முதலமைச்சர் சொல்வதென்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.