நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் அறிவியல் கலைக் கல்லூரி மாணவிகளுக்கு தனியார் சேவை சங்கம் சார்பில் கைத்தொழில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
கல்லூரியில் பயிலும் மாணவியருக்கு பாத்திரங்களை தூய்மைப்படுத்த உதவும் ஜெல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயார் செய்யும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதைப்பற்றி பேசிய மாணவிகள், படிக்கும்போதே கைத்தொழில் கற்றுக் கொள்வதால் எதிர்காலத்தில் புதிய தொழில் தொடங்க இது போன்ற பயிற்சி வகுப்புகள் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தனர்.