அரசு மருத்துவமனைகளில் பிரசவம் முடிந்த தாய்மார்களை அவர்களின் வீட்டிற்கே அழைத்து செல்லும் இலவச தாய், சேய் ஊர்தி சேவை தமிழ்நாட்டில் சிறப்பாக செயலபட்டு வருகிறது.
நாகை அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவம் முடிந்து பிறந்த குழந்தையுடன் வீடு திரும்பும் பெண்களை வீட்டிற்கு அழைத்து செல்ல பயன்பட்டு வந்த இலவச தாய் சேய் ஊர்தி வாகனம் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு நாகையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பொரவச்சேரி அருகே பழுதானது.
அதன்பின்னர் பொரவச்சேரி மெயின் ரோட்டில் நிறுத்தப்பட்ட வாகனம். இதுவரை சரி செய்யபடாமலும், அங்கிருந்து அப்புறபடுத்த படாமலும் கடந்த ஐந்து நாட்களாக அதே இடத்தில் நின்று கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் அந்த வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டு இருப்பதால் அதிக வாகனங்கள் செல்லும் நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்களால் வாகனத்தில் உள்ள உதிரி பாகங்கள் திருடு போவதற்கும் வாய்ப்பு உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் இந்த இலவச வாகனம் சரி செய்யபடாமல் இருப்பதால் பிரசவம் முடிந்த ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே வாகனத்தை சீர் செய்து மீண்டும் இலவச தாய் சேய் ஊர்தி சேவையை தொடங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.