திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் நரம்பியல் நிபுணர் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ். இவர் கரோனா தொற்று காரணமாக, சில நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இந்நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வேலங்காடு மின் மயானத்தில் சைமனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவருக்கு நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் பொது தொழிலாளர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பொது தொழிலாளர் சங்கக் கட்டடத்தில் வைக்கப்பட்ட மருத்துவர் சைமனின் உருவப்படத்துக்கு தொழிலாளர்கள் மாலை அணிவித்தனர்.
இதில் சங்கத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெகவீரபாண்டியன், சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு மலர்த் தூவி அஞ்சலி செலுத்தி, மெழுகுவர்த்தி ஏந்தி இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: கல்லறையை நிரப்பிய கரோனா சவப்பெட்டிகள்... மக்கள் நேரில் அஞ்சலி!