ETV Bharat / state

புயல் நிவாரணத்தை முழுமையாக மக்களிடம் சேர்ப்பேன் - கஜா புயல்

நாகப்பட்டினம்: புயல் நிவாரணம் நாகை மக்களுக்கு இதுவரை சரியாக சென்று சேரவில்லை, அந்த நிவாரணம் முழுமையாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வேன் என நாகை மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் குருவைய்யா உறுதியளித்துள்ளார்.

MNM
author img

By

Published : Apr 6, 2019, 11:57 AM IST

ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழ்நாட்டில் மக்களவைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்துக்கட்சிகளும் வாக்கு சேகரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சூழலில் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர், ஓய்வு பெற்ற நீதிபதி குருவையா நாகையில் பரப்புரையில் ஈடுபட்டார். இதன் பின்னர் நமது ஈ டிவி பாரத் செய்தியாளருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் கூறியதாவது,

"நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நாகூர், திட்டச்சேரி, திருமருகல் உள்ளிட்ட பல கிராமங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பால் மிகுந்த இன்னல்களை சந்தித்து வருகிறது. இதுகுறித்து மத்திய அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரத்யேகப்பேட்டி

அதேபோல், பழமை வாய்ந்த நாகை துறைமுகம், தற்போது பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது, அதனை நவீனப்படுத்தி நடைமுறைக்கு கொண்டுவந்து அதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மற்ற தொகுதிகளைக் காட்டிலும், நாகப்பட்டினம் தொகுதி கல்வியில் பின்தங்கி தொகுதியாக இருப்பதால், அதனை போக்க சர்வதேச அளவிலான கல்வி கிடைக்க வழிவகை செய்யப்படும்.

புயல் நிவாரணம் என்பது முழுமையாக இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவில்லை. அந்த நிவாரணம் முழுமையாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உலக தரத்தில் மருத்துவ சிகிச்சை, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, இலங்கை உடனான தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணல் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளிப்போம்.

இதற்கு முன்பு மக்களவைத்தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகவும், சரியாகவும் செய்யாத காரணத்தினால்தான், தொகுதியில் உள்ள குறைகள் இன்று வரை தீர்க்கப்படாமல் உள்ளது. நாங்கள் வெற்றி பெற்றால் வித்தியாசமான முறையில் மக்களுடன் கலந்து பேசி, அவர்களுக்கான குறைகளை தீர்ப்போம். நிதி ஒதுக்கீட்டில் எந்த ஒளிவு மறைவும் இன்றி வெளிப்படைத்தன்மையுடன் தொகுதிக்கான செலவு செய்யப்படும். கடந்த 50 ஆண்டுகளில் மக்கள் பார்த்திராத ஒரு மக்களவை உறுப்பினர் போல் நாங்கள் செயல்படுவோம்" எனத் தெரிவித்தார்.

மேலும், கட்சித்தலைவர் கமலின் பேச்சு அனைவருக்கும் புரிகிறது, கமலின் அளவிற்கு எந்த கட்சித்தலைவரும் பேசுவதில்லை. மற்ற கட்சி தலைவர்களின் பேச்சுகள் எதிர்க்கட்சியினரை கேலி, கிண்டல் செய்வதற்காக உள்ளதே தவிர மக்களைப் பற்றி கமல் மட்டுமே தெளிவாக பேசுவதாக கூறி முடித்தார்.

Intro:கடந்த கால பாராளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் பணிகளை சரியான முறையில் செய்யாததே, தொகுதிகளில் பிரச்சனை நீடிப்பதற்கு காரணம் என, மக்கள் நீதி மய்யம், நாகை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் குருவைய்யா பேட்டி.

Body:கடந்த கால பாராளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் பணிகளை சரியான முறையில் செய்யாததே, தொகுதிகளில் பிரச்சனை நீடிப்பதற்கு காரணம் என, மக்கள் நீதி மய்யம், நாகை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் குருவைய்யா பேட்டி.

வருகின்ற 18-ஆம் தேதி, தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளின் பரப்புகளிலும், வாக்கு சேகரிப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த சூழலில் நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் , ஓய்வு பெற்ற நீதிபதி. குருவையா நாகையில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர், நமது செய்தியாளரின் பிரத்தியோக பேட்டிக்கு பதில் அளித்து பேசினார்.

முன்னதாக, தொகுதியின் முக்கிய பிரச்சனை என்று எதை நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, பதிலளித்த அவர்.

நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களின் எல்லை பகுதியில் அமைந்துள்ள, தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது என்றும். இதனால் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நாகூர், திட்டச்சேரி , திருமருகல் உள்ளிட்ட பல கிராமங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பால் மிகுந்த இன்னல்களை சந்திப்பதாகவும், இதுகுறித்து மத்திய அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதேபோல், பழமை வாய்ந்த நாகை துறைமுகம், தற்போது பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதாகவும், அதனை நவீனப்படுத்தி, நடைமுறைக்கு கொண்டுவந்து, அதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்,

மற்ற தொகுதிகளை காட்டிலும், நாகப்பட்டினம் தொகுதி கல்வியில் பின்தங்கி தொகுதியாக இருப்பதாகவும், அதனை போக்க சர்வதேச அளவிலான கல்வி கிடைக்க வழிவகை செய்யப்படும் என தெரிவித்தார்.

மேலும், புயல் நிவாரணம் என்பதை முழுமையாக இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவில்லை என்றும், அந்த நிவாரணம் முழுமையாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறிய அவர்.

உலக தர மருத்துவ சிகிச்சை, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, இலங்கை உடனான தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணல் உள்ளிட்ட, பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் தாங்கள் தேர்தல் முழக்கம் என்ன என்ற கேள்விக்கு

சர்வதேச அளவிலான கல்வி, மறைந்த அரசியல் மாண்பை நிலைநாட்டல், சாதிய வேறுபாடுகளை களைதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, இலங்கை தமிழர் பிரச்சினையில் முன்னுரிமை போன்றவற்றை தங்கள் தேர்தல் முழக்கமாக முன் வைப்போம் என்று தெரிவித்தார்.

முந்தைய பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர்களுக்கான நீதியை முழுமையாகவும், சரியாகவும் செலவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு தங்கள் பதில்? நிதியை செலவு செய்வதற்கு தங்களுடைய திட்டம் என்ற கேள்விக்கு.

இதற்கு முன்பு பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர்கள் , தங்கள் நிதியை முழுமையாகவும், சரியாகவும் செய்யாத காரணத்தால் தான், தொகுதியில் உள்ள குறைகள் இன்று வரை தீர்க்கப்படாமல் உள்ளது என்றும், நாங்கள் வெற்றி பெற்றால் வித்தியாசமான முறையில் மக்களுடன் கலந்து பேசி, அவர்களுக்கான குறைகளை தீர்ப்போம் எனவும், நிதி ஒதுக்கீடு குறித்த எந்த ஒளிவுமறைவும் இன்றி வெளிப்படைத்தன்மையுடன் தொகுதிக்கான செலவு செய்வோம் எனவும், கடந்த 50 ஆண்டுகளில் மக்கள் பார்த்திராத ஒரு பாராளுமன்ற உறுப்பினர் போல் நாங்கள் செயல்படுவோம் என அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் 4 ,கம்யூனிஸ்ட் 5 ,திமுக 4 ஆகிய மூன்று கட்சிகள் 13 முறை வெற்றி கண்ட தொகுதியில் தற்போது இந்த மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து களம் காண்கின்றன, அதேபோல ஆளும்கட்சியான அதிமுக வலுவான இரட்டை இலை சின்னத்தில் களம் காணும் நிலையில் , இவர்களை சமாளித்து நீங்கள் வெற்றி காண கையாளும் உத்தி என்ன?

மக்கள் நீதி மய்யம் கட்சியானது அனைவருக்கும் தெரிந்த கட்சி என்றும், தங்களின் சின்னம் டார்ச் லைட் என்பது அனைத்து மக்களும் அறிந்த சின்னம் ஆகிவிட்டதாகவும், தாங்கள் தீவிர பிரச்சாரத்தின் மூலம் எங்களுடைய கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திநிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலின் பேச்சு புரியவில்லை என கூறி சில மாவட்ட நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகிக் கொள்ளும் நிலையில், பாமர மக்களுக்கு அவரின் பேச்சு புரியாமல் ,கமலின் கொள்கையை ஏற்று எவ்வாறு வாக்களிப்பார்கள் என்ற கேள்விக்கு,

கமலின் பேச்சு அனைவருக்கும் புரிந்து உள்ளது, யாருக்கும் புரியாமல் இல்லை எனவும், மக்கள் நீதி மைய கட்சி தலைவரின் அளவிற்கு எந்த கட்சி தலைவரும் பேசுவதில்லை என்றும், மற்ற கட்சி தலைவர்களின் பேச்சுகள் எதிர்க்கட்சியினரை கேலி, கிண்டல் செய்வதற்காக உள்ளதே தவிர மக்களைப் பற்றி கமல் மட்டுமே தெளிவாக பேசுவதாக அவர் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.