ETV Bharat / state

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி ஹைட்ரோ கார்பன் பணிகள் தீவிரம்!

நாகை:  விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி ஹைட்ரோ கார்பனை எடுத்துச்செல்ல வயல்களில் குழாய்களைப் பதிக்கும் பணிகளை கெயில் நிறுவனம் தொடக்கியுள்ளது.

விவசாயிகள் எதிர்ப்பை மீறி ஹைட்ரோ கார்பன் பணிகள்
author img

By

Published : Jul 18, 2019, 10:13 AM IST

நாகை மாவட்டம் மாதானத்தில் இருந்து மேமாத்தூர் வரை 29 கி.மீ தூரத்திற்கு விவசாய நிலங்களின் வழியே கெயில் நிறுவனம் ராட்சச குழாய்கள் புதைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி காவல்துறையினர் பாதுகாப்புடன் குழாய் பதிக்கும் பணிகளை கெயில் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக உள்ள குருவை நெட்பயிர்களை சேதப்படுத்தி குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

விவசாயிகள் எதிர்ப்பை மீறி ஹைட்ரோ கார்பன் பணிகள்

மேலும், அந்த வழியே செல்லும் விவசாயிகள், பொதுமக்கள் கூட பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

Intro:நாகை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பனை எடுத்துச்செல்ல, நடவு நட்ட வயல்களில் விவசாயிகள் எதிர்ப்பை மீறி கெயில் குழாய் பதிக்கும் பணி மீண்டும் துவக்கம். விவசாயிகள் அதிர்ச்சி:-

Body:நாகை மாவட்டம் மாதானத்தில் இருந்து மேமாத்தூர் வரை 29 கி.மீ தூரத்திற்கு விவசாய நிலங்களின் வழியே கெயில் நிறுவனம் இராட்சச குழாய்கள் புதைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி போலீஸ் பாதுகாப்புடன் குழாய் பதிக்கும் பணி மீண்டும் துவங்கியது. முடிகண்டநல்லூர், உமையாள்புரம் ஆகிய ஊர்களில் நெற்கதிர்கள் வந்த நிலையில் இன்னும் 10 நாட்களில் அறுவடைக்கு தயாரான குருவை நெட் பயிர்களை சேதப்படுத்தி குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. அந்த வழியே செல்லும் விவசாயிகள், பொதுமக்கள் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாதானம், திருநகரி உள்ளிட்ட பகுதிகளில் எடுக்கப்படும் ஹைட்ரோகார்பன்களை ஒருங்கிணைத்து கெயில் குழாய் நிறுவனம் பதிக்கும் குழாய்கள் மூலம் எடுத்துச் செல்ல ஓஎன்ஜிசி நிறுவனம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை இது என்று விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பேட்டி :- இளங்கோவன்- விவசாயி.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.