ETV Bharat / state

சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு  இலவச கண் சிகிச்சை - நுகர்பொருள் வாணிபக் கழகம் ஏற்பாடு!

author img

By

Published : Oct 4, 2019, 6:01 PM IST

நாகை: பனங்குடி அருகே சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

naagai

நாகையை அடுத்த பனங்குடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தனியார் கண் மருத்துவமனை சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்கள், கிடங்கு பணியாளர்கள் ஆகியோர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இந்த காமை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில், சுமை தூக்கும் தொழிலாளர்கள், கிடங்கு பணியாளர்கள், திறந்தவெளி சேமிப்பு மையம், நவீன அரிசி ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொழிலாளர்களுக்கு, இலவசமாக கண் பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்துகள், மாத்திரைகள், கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

இலவச கண் சிகிச்சை முகாம்

இதையும் படிங்க:

டெங்கு இல்லாத புதுக்கோட்டை... விழிப்புணர்வு முகாமில் பேசிய மாவட்ட ஆட்சியர்

Intro:சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
Body:சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் வி.பி.என் தனியார் கண் மருத்துவமனை இணைந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கான நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமினை இன்று நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

நாகையை அடுத்த பனங்குடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் நடைபெற்ற சிறப்பு இலவச கண்சிகிச்சை முகாமில், சுமை தூக்கும் தொழிலாளர்கள், கிடங்கு பணியாளர்கள், திறந்தவெளி சேமிப்பு மையம் மற்றும் நவீன அரிசி ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும் இலவசமாக கண் பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர்களுக்கு கண்களுக்கான சொட்டு மருந்து, மாத்திரைகள், கண்ணாடிகள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டன.

இந்த முகாமில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முன்னதாக நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.