ETV Bharat / sports

வங்கதேச டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! அணியில் இடம் பிடித்த தமிழக வீரர்! - India T20 Squad against bangladesh - INDIA T20 SQUAD AGAINST BANGLADESH

India T20 Squad Against Bangladesh T20 Cricket: வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
File Picture (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 29, 2024, 11:14 AM IST

ஐதராபாத்: வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது,. இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடர் மழை காரணமாக தடைபட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவிற்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய நிலையில், இந்திய அணியில் மயங்க் யாதவ் இடம் பிடித்துள்ளார்.

அதேபோல் நீண்ட நாட்களுக்கு பின்னர் இளம் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து ஜிதேஷ் சர்மாவும் இந்தியா அணியில் இணைந்துள்ளார். மற்றொரு விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் ஜிதேஷ் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் என இரண்டு விக்கெட் கீப்பர் இடம் பிடித்துள்ளனர். நிதிஷ் குமார், ஹர்ஷித் ரானா, மயங்க் யதவ் ஆகியோர் முதல் முறையாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். வங்கதேச டி20 தொடரில் இந்திய அணிக்காக தனது முதல் ஆட்டத்தில் அவர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றபடி வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியில் உள்ளனர். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு இந்த முறையும் வாய்ப்பு வழங்கப்படவில்லௌ. வழக்கம் போல் ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் தமிழகம் சார்பில் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அதேபோல் நட்சத்திர வீரர்கள் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கும் இந்திய அணியில் இடம் அளிக்கப்படவில்லை. இதில் இஷான் கிஷன் நடப்பு துலிப் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் 6ஆம் தேதி குவாலியரில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 9ஆம் தேதி இரண்டாவது டி20 கிரிக்கெட் டெல்லியிலும், அக்டோபர் 12ஆம் தேதி ஐதராபாத்தில் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியும் நடைபெறுகின்றன. வங்தேச தொடருக்கான இந்திய அணி விவரம் பின்வருமாறு:

இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரின்கு சிங், ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி, ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.

இதையும் படிங்க: 2025 ஐபிஎலில் இதுதான் நடக்கும்! கறாராக சொன்ன பிசிசிஐ! என்னென்ன விதிமுறைகள் தெரியுமா? - 2025 IPL Retention Rules

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.