மயிலாடுதுறை: தமிழ்நாடு அரசால் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் 49 பள்ளிகளை சேர்ந்த 4,031 மாணவிகள், 2,845 மாணவர்களுக்கு வழங்குவதற்காக மொத்தம் 6,876 மிதிவண்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அவாண் நிறுவனத்திடமிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்த மிதிவண்டிகளுக்கான உதிரி பாகங்கள் பொருத்தும் பணிகள், இரவு பகலாக கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வந்தன.
உதிரி பாகங்கள் பொருத்தப்பட்ட பின்னர், பள்ளி வளாகத்தில் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில், மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் மிதிவண்டிகளின் சக்கரங்கள் துருப்பிடித்து சேதம் அடைவதாக மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மாணவர்களுக்கு வழங்கப்படும் வரை மிதிவண்டிகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சீர்காழியில் கடலில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு!