நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்தவர் பாவலர் க. மீனாட்சி சுந்தரம். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர், ஜாக்டோ - ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளரான இவர், தமிழ்நாடு முன்னாள் சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார்.
தனது முதுமையையும் பொருட்படுத்தாது ஆசிரியர்களுக்காகவும், அரசு ஊழியர்களின் நலனுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த இவர், வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இவர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று திடீரென இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 90. இவரது இறப்பிற்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி: 9 மாதங்களுக்குப் பின்பு போலீஸ் விசாரணையில் சிக்கினார்