நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலத்தை சேர்ந்த கீழ் தஞ்சை மாவட்ட முன்னாள் திமுக செயலாளரும், நாகை மாவட்ட திமுக அவைத்தலைவருமான மீனாட்சி சுந்தரம் (84) உடல்நலக் குறைவால் இன்று (செப்.21)காலமானார்.
அவரின் இறுதிச் சடங்கானது அவரின் சொந்த ஊரான வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் செட்டியார் குத்தகையில் நடைபெற உள்ளது.
இவரது மறைவுக்கு திமுகவைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பெரியார் கொள்கையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட மா.மீனாட்சி சுந்தரத்திற்கு அண்மையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.