ETV Bharat / state

சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு: 3வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்.. தீர்வு கிடைக்குமா? - fishermen protest continues 3rd day

மயிலாடுதுறையில் 21 மீனவ கிராமங்கள் சுருக்குமடி வலையை முற்றிலுமாக தடை செய்ய வலியுறுத்தி 3வது நாளாக கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் தொழில் மறியல் செய்து வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர்.

surukkumadi valai
சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு
author img

By

Published : Aug 3, 2023, 1:39 PM IST

மயிலாடுதுறை: தரங்கம்பாடி மீனவ கிராமம் அருகே கடலில் நேற்று முன்தினம் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக மீன்களை ஏற்றி வந்த பைபர் படகையும், படகில் இருந்த சந்திரபாடி மீனவர்கள் 3 பேரையும் தரங்கம்பாடி மீனவர்கள் சிறைப்பிடித்து தரங்கம்பாடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் குறித்து அறிந்து வந்த கடலோர காவல் படை மற்றும் பொறையார் போலீசார் மீனவ பஞ்சாயத்தார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சந்திரபாடி மீனவர்களை பொறையார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். மேலும் மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் படகில் இருந்த மீன்கள் தரங்கம்பாடி துறைமுகத்தில் ஏலம் விடப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக பொறையார் காவல் நிலையத்திற்கு வந்த சந்திரபாடி மீனவர்கள் தரங்கம்பாடி மீனவர்களின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் படகை தங்களிடம் ஒப்படைக்கவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், சுருக்குமடி வலையை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சின்னூர்‌பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர் குப்பம், கீழமூவர்கரை, மேலமூவர்கரை, தொடுவாய், பழையார், கொடியம்பாளையம் உள்ளிட்ட 21 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்றுமுதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தரங்கம்பாடி தலைமை மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் தலைமையில் நேற்று முன்தினம் தரங்கம்பாடியில் நடைபெற்ற 18 மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் சுருக்குமடி வலையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் தொழில் மறியல் செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து சுருக்குமடி வலையை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சின்னூர்‌பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர் குப்பம், கீழ மூவர்கரை, மேலமூவர்கரை, தொடுவாய், பழையார், கொடியம்பாளையம் உள்ளிட்ட 21 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லாமல் தொழில் மறியல் செய்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர், காரைக்கால், பாண்டிச்சேரி ஆகிய 9 மாவட்ட மீனவ பஞ்சாயத்தார்கள் ஆலோசனை கூட்டம் நாளை தரங்கம்பாடியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: TN ED Raid: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் வீட்டில் விடிய விடிய நடந்த ரெய்டு நிறைவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.