ETV Bharat / state

வேதாரண்யத்தில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் - கூட்டத்தில் முடிவு.! - fisherman protest continue at nagapttinam

நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் தடை செய்யப்பட்ட வலை பயன்பாட்டை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மீனவர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

protest
protest
author img

By

Published : Mar 13, 2020, 11:33 PM IST

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள ஆறுகாட்டுத்துறை, விழுந்தான்மாவடி,புஷ்பவனம் உள்ளிட்ட 15 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டட மீன்பிடி வலையை பயன்படுத்தியதாக கீச்சாங்குப்பம் - வெள்ளப்பள்ளம் ஆகிய இரு கிராம மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வேதாரண்யம் தாலுகா, கீழையூர் தாலுகாவைச் சேர்ந்த 15 மீனவ கிராமத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேதாரண்யத்தில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடரும்

எனவே, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையெனில் தங்களது வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்றும் கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: திருவள்ளூரில் ஒரு ரூபாய் பிரியாணி - அலைமோதிய மக்கள் கூட்டம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.