மயிலாடுதுறை: சீர்காழி, திருமுல்லைவாசல், பூம்புகார், மடவாமேடு, பழையார், கொட்டாய் மேடு, சந்திரபாடி உள்ளிட்ட 13 மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கோடு சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சுருக்கு மடி வலை தடையை உடனடியாக நீக்க வலியுறுத்தி 13 மீனவர் கிராமங்களை சேர்ந்த 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலை நிறுத்தம்
மீனவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக மீனவர்கள் அல்லாத கிராமத்தினரும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், போராட்டத்திற்கு ஆதரவாக திருமுல்லைவாசல், பூம்புகார், பழையார், சந்திரபாடி ஆகிய பகுதியில் வணிகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், ஐஸ் கட்டி தயாரிப்பாளர்கள், மீன் வாங்கும் வியாபாரிகள் கடையை அடைத்தும் வேலை நிறுத்தம் செய்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்