ETV Bharat / state

திங்கள்கிழமை பருத்தி ஏலத்திற்கு இன்று முதலே விற்பனைக் கூடத்தில் காத்திருக்கும் விவசாயிகள் - farmers waiting with cotton bundles at Nagapattinam to sell cotton in auction

நாகை : செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாளை பருத்தி ஏலம் நடைபெற உள்ள நிலையில், இன்றே பருத்தி மூட்டைகளை எடுத்து வந்து விவசாயிகள் காத்திருந்த வண்ணம் உள்ளனர்.

திங்கட்கிழமை பருத்தி ஏலத்திற்கு இன்று முதலே விற்பனைக் கூடத்தில் காத்திருக்கும் விவசாயிகள்

author img

By

Published : Jun 21, 2020, 6:31 PM IST

நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை அன்று பருத்தி ஏலம் நடைபெறும். இந்த வாரத்திற்கான ஏலம் நாளை நடைபெற உள்ள நிலையில், சுமார் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த பருத்தி மூட்டைகளை இன்றே ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு எடுத்து வந்து விற்பனை செய்ய காத்திருந்த வண்ணம் உள்ளனர்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1000 குவிண்டால்வரை மட்டுமே வைக்க இட வசதி உள்ள நிலையில், மேலும் 1000 குவிண்டால் பருத்தி விற்பனைக் கூடத்திற்கு வெளியே வாகனங்களில் வைக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதில், நாகை, திருவாரூர், விழுப்புரம், தஞ்சாவூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உள்ள தனியார் வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் கலந்துகொண்டு, பருத்தியின் தரம், ஈரப்பதம் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்கின்றனர்.

செம்பனார்கோவில் ஒன்றியத்தில் மட்டும் இதுவரை 1200 ஏக்கர் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு அதிக அளவில் பருத்தி மகசூல் கிடைத்து வருவதாகவும், ஆனால் அரசு நிர்ணயித்துள்ள ஆதார விலையான குவிண்டால் 5,236 ரூபாய்க்கு கீழ் மிகக்குறைவான விலையில் தனியார் வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் விலை நிர்ணயம் செய்வதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு மிகக்குறைவாக 3330 ரூபாய் என தனியார் வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்ததால் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : உலக யோகா தினம்: காவலர்களுக்கு யோகா பயிற்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.