ETV Bharat / state

'நவம்பர் 9 ஆம் தேதி தலைமை செயலகம் முற்றுகை போராட்டம்' - காவிரி விவசாயிகள் சங்கம்

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 195 கிராமங்களுக்கு பூஜ்ஜியம் சம்பா இழப்பீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து நவம்பர் 9 ஆம் தேதி தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று காவிரி விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

author img

By

Published : Oct 22, 2021, 7:35 PM IST

பி.ஆர்.பாண்டியன் பேட்டி
பி.ஆர்.பாண்டியன் பேட்டி

மயிலாடுதுறை: கடந்த ஜனவரி மாதம் பெய்த கனமழை காரணமாக நாகை, மயிலாடுதுறை திருவாரூர் மாவட்டங்களில் சம்பா சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. இடுபொருள் மானியமாக அப்போதைக்கு அதிமுக அரசு இழப்பீடு வழங்கிய நிலையில், பயிர் இன்சூரன்ஸ் செய்த விவசாயிகளுக்கு முழுமையாக இழப்பீடு தொகை பெற்று தரப்படும் என்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

பயிர் இழப்பீடு தொகை தற்போது இஃப்கோ என்ற தனியார் காப்பீட்டு நிறுவனத்தால் ஒன்றிய, மாநில அரசுகளின் பங்கு தொகையுடன் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது.

பூஜ்ஜியம் இழப்பீடு

நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மொத்தமுள்ள 1072 வருவாய் கிராமங்களில் 195 வருவாய் கிராமங்களுக்கு இழப்பீடு தொகை வெறும் பூஜ்ஜியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 195 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட பயிர் இழப்பீடு கிடைக்காது.

இதுகுறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் இன்று(அக்.22) நடைபெற்றது. அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முற்றுகை போராட்டம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், " மழைவெள்ளம் இழப்பீடு குறித்து அப்போதைய எதிர்க்கட்சி தலைவர், தற்போது முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் நேரடியாக பார்வையிட்டு விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து உள்ளதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது தனியார் காப்பீட்டு நிறுவனமும், வேளாண்துறை அலுவலர்களும் இணைந்து விவசாயிகளுக்கு பெரும் மோசடியை செய்துள்ளனர்.

பி.ஆர்.பாண்டியன் பேட்டி

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை அரசு தர வேண்டும், இழப்பீடு தொகை வழங்காவிட்டால் நவம்பர் 9 ஆம் தேதி தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். தமிழ்நாடு முழுவதும் நிலவும் உரத் தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: உலகம் போற்றும் செம்மொழியின் அடுத்தகட்ட நகர்வு - புதிய விசைப்பலகை, ஒருங்குறி மாற்றி அறிமுகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.