நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டுக்கான பயிர் காப்பீடு 146 கிராமங்களுக்கு வழங்கபடவில்லை. உரிய நேரத்தில் வழங்காமல் காலம் தாழ்த்தும் காப்பீடு நிறுவனங்களை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் அனைவருக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும். சம்பா சாகுபடிக்கு இதுவரை முழுமையாக தண்ணீர் வழங்காத பொதுபணித்துறையை கண்டித்தும், கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற உடனே தண்ணீர் வழங்க வேண்டும் எனவும், தரமான விதை மற்றும் உரங்களை மானிய விலையில் தட்டுபாடு இன்றி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
இதனையடுத்து அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 விவசாயிகளை சீர்காழி காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: டிராக்டர் ஓட்டுநர் உயிரிழப்பு: உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு உறவினர்கள் சாலை மறியல்!