மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கடைமடை பகுதியான திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கர் நேரடி விதைப்பு சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை திறந்து மூன்று மாதங்கள் மேலாகியும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் முழுமையாக வந்து சேரவில்லை. தண்ணீரை நம்பி நேரடி விதைப்பு செய்த விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுவதால், தண்ணீர் வழங்க கோரி பலமுறை அலுவலர்களிடம் மனு அளித்தும் தண்ணீரை வழங்காமல் அலட்சியப்படுத்தி உள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று (செப்டம்பர் 21) சீர்காழி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, அலுவலக வாயில் கதவை பூட்டி உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கழுமலை ஆற்றில் தண்ணீரை முழுமையாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுப்பணித்துறை அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் உள்ளிருப்புப் போராட்டம் - விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
மயிலாடுதுறை: சீர்காழி பொதுப்பணித்துறை அலுவலகத்தை பூட்டி கடைமடை விவசாயிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.