ETV Bharat / state

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா! - மயிலாடுதுறை கனமழை

mayiladuthurai farmers dharna: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த வருடம் மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கான நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில் நிவாரணம் வழங்காமல் விடுபட்ட 8 கிராம விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 10:54 PM IST

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த வருடம் பருவம் தவறிய அதித கனமழையினால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழிந்தது. இதனை பார்வையிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க‌.ஸ்டாலின் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களில் உள்ள குடும்ப அட்டை ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கினார்.

அதன் அடிப்படையில் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. இதில் தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள கடக்கம், அகர ஆதனூர், பெரம்பூர், முத்தூர், கிளிமங்கலம், அகரவல்லம், கிளியனூர், எடக்குடி, கொடை விளாகம் ஆகிய எட்டு கிராமங்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

இந்நிலையில் பயிர் பாதிப்பிற்கு நிவாரணம் வழங்கப்படவில்லை, நிவாரணம் வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி இன்று விவசாயிகள் காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்றச் சங்கம் தலைவர் குரு.கோபி கணேசன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்து அரங்கில் உள்ளேயே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மனுவை பெற்றுக் கொண்டார். விவசாயிகள் அளித்த மனுவில், ”விடுபட்டு போன கிராமங்களுக்கான இரண்டாம் தடவையாகக் கணக்கெடுப்பு செய்யப்பட்ட விவசாயிகளின் 1169.360 ஹெக்டேர் நிலங்களுக்கான 2 கோடியே 33 லட்சத்து 87 ஆயிரத்து 200 ரூபாய் தொகையினை 1738 விவசாயிகளுக்கு வழங்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருவம் தப்பிய மழையினால் பாதிக்கப்பட்டு உளுந்து பயருக்கான நிவாரணமாக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட ஹெட்டேருக்கு 3000 என்பதை 17 ஆயிரத்து 917 விவசாயிகளுக்கு மூன்று கோடியே 52 லட்சத்து 72 ஆயிரத்து 830 ரூபாய் வழங்க வேண்டும்.

மேற்கண்ட இரண்டிற்கும் பருவம் தப்பிய மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் மற்றும் பயிர் வகை பயிர்களுக்குக் கணக்கெடுப்பின் அடிப்படையில் திருந்திய நிதி ஒதுக்கீடு செய்து வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இருக்கையிலிருந்து எழுந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: கருகிய பயிரை டிராக்டர் கொண்டு அழிக்கும் விவசாயி! காவிரி தண்ணீர் இல்லாததால் அவலம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.