ETV Bharat / state

காப்பீட்டுத் தொகையில் மோசடி: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வேண்டுகோள் - விவசாயிகள் வேண்டுகோள்

விவசாயிகளுக்கு குறுவை பயிர்க் காப்பீட்டுத் தொகை அறிவித்ததில், காப்பீட்டு நிறுவனம் மாபெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறுவை காப்பிட்டு தொகை, விவசாயிகள் குற்றச்சாட்டு, farmers complaint about crop insurance, விவசாயிகள் வேண்டுகோள், பயிர்க் காப்பீட்டுத் தொகை
காப்பீட்டுத் தொகையில் மோசடி
author img

By

Published : Oct 1, 2021, 4:59 PM IST

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு குறுவை பயிர்க் காப்பீட்டுத் தொகை அறிவித்ததில் காப்பீட்டு நிறுவனம் மாபெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.

இது குறித்து, மயிலாடுதுறையில் செய்தியாளரைச் சந்தித்த காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்றச் சங்கத் தலைவர் குரு. கோபிகணேசன், "மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலத்தடி நீரைக்கொண்டு 200-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, அதற்குக் காப்பீடும் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வெறும் 15 கிராமங்களுக்கு மட்டுமே பயிர்க் காப்பீட்டுத் தொகையைத் தந்திருப்பது காப்பீட்டு நிறுவனத்தின் (ஏஐசி) மோசடி செயலாகும்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சர்வே எண் வாரியாக 83 ஆயிரத்து 113 விவசாயிகள் 25 ஆயிரத்து 576 ஹெக்டேர் நஞ்சை நிலப்பரப்புக்குப் பதிவுசெய்து, காப்பீட்டுத் தொகையாக, ஒன்றிய, மாநில அரசுகள், விவசாயி பிரிமீயம் சேர்த்து சுமார் ரூ.10 கோடி செலுத்தியுள்ள நிலையில், காப்பீட்டு நிறுவனத்தால் வெறும் ரூ.52 லட்சம் மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகளுக்காக விவசாய பட்ஜெட்டை அறிவித்த தமிழ்நாடு அரசு காப்பீட்டுத் தொகை என்கிற பெயரில் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் தொகையைக் கொடுப்பதை நிறுத்தி, அண்டை மாநிலங்களான புதுச்சேரி, ஆந்திரம், சத்தீஸ்கர் போன்று பின்னேற்பு மானியமாக விவசாயிகளுக்கு நேரடியாகவே வழங்க வேண்டும்.

விவசாய சங்க நிர்வாகி குரு. கோபிகணேசன் பேட்டி

மேலும், கடந்தாண்டு சம்பா, தாளடிக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகையையாவது மயிலாடுதுறை மாவட்டத்தில் சரியாகக் கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மாடியில் இருந்து தவறி விழுந்த 18 மாத குழந்தை உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.