ETV Bharat / state

நாள் ஒன்றுக்கு 10,000 லிட்டர் இலவசக் குடிநீர்... அசத்தும் விவசாயி!

நாகை: சீர்காழி அருகே மழைநீரை கிணற்றில் சேமித்து, அதை சுத்திகரித்து நாளொன்றுக்கு 10 ஆயிரம் லிட்டர் வரை பொதுமக்களுக்கு விலையின்றி தண்ணீர் வழங்கி தாகம் தீர்த்து வருகிறார் காசிராமன் என்கிற விவசாயி.

கிணறு
author img

By

Published : Jun 25, 2019, 6:48 PM IST

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காட்டைச் சேர்ந்தவர் காசிராமன் (43). சமூக ஆர்வலரான இவர், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் ஈர்க்கப்பட்டு, இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகிறார்.

தண்ணீரை பூமியில் தேடக்கூடாது வானத்தில் இருந்து கொண்டு வரவேண்டும் என்ற நம்மாழ்வாரின் வரிகளுக்கு ஏற்ப, மழைநீரை கிணற்றில் சேகரித்து வந்த இவர், கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் பொதுமக்களுக்கு நாளொன்றுக்கு 10 ஆயிரம் லிட்டர் வரை இலவச குடிநீரை விநியோகம் செய்கிறார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மண் பானையில் தண்ணீர் விநியோகிக்கத் தொடங்கினார் காசிராமன். அதன்பின்னர், பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப தற்போது நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறார். மேலும், கோடை காலத்தில் வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ள வெந்தையம், கருஞ்சீரம் கலந்து குளிர்சியான தண்ணீர் வழங்கும் காசிராமன் அதேபோல் மழை காலங்களில் மூலிகை குடிநீரும் வழங்கி வருகிறார். திருவெண்காடு சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பாகி விட்ட நிலையில், பெய்யும் மழை நீரை தனது வீட்டின் கிணற்றில் அப்படியே சேகரித்து வைக்கிறார். அதனை மீண்டும் இயற்கை முறையில் குழாங்கல் மணல் உதவியுடன், சுத்திகரித்து, தன் வீட்டு வாசலில் பந்தல் அமைத்து அனைவரும் இங்கு இலவசமாக வந்து தண்ணீர் எடுத்துச் செல்லலாம் என்ற அறிவிப்புடன் விநியோகிக்கிறார். அப்பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள் குடிநீர் பாட்டில்களிலும், சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் குடங்களிலும் தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர்.

தனி ஒரு மனிதனாக சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இவர் வழங்கும் குடிநீரே பொது மக்களின் தாகத்தைத் தீர்த்துவருகிறது. கடும் வறட்சியால் தற்போது தண்ணீரின் தேவை அதிகாரித்து வருகிறது. இதனை ஓரளவுக்கு தீர்க்கும் விதமாக காசிராமன் தனது சொந்த இடத்தில் பெரிய அளவில் கிணறு ஒன்றையும் தோண்டி வருகிறார். அதன்மூலம் மழைநீரை அதிகளவில் சேகரித்து கடற்கரையோர கிராம மக்களுக்கு குடி தண்ணீரின் தேவையை முழுமையாக தினந்தோறும் வழங்குவதற்காக தனது சொந்தசெலவில் கிணற்றை உருவாக்கி வருகிறார். அதுமட்டுமின்றி கிராமப்புறங்களில் பாழடைந்து கிடக்கும் கிணறுகளையும் சுத்தப்படுத்தி மழைநீரை சேமிக்கும் வகையில் தயார்செய்து வருகிறார்.

பறவைகளும், கால்நடைகளும் காசு கொடுத்தா தண்ணீர் வாங்க முடியும் என்று கேள்வி எழுப்பும் காசி ராமன், வீட்டைச் சுற்றி மரங்களை வளர்ப்பதுடன், பறவைளுக்கும் தண்ணீர் வழங்குகிறார். மேலும் நீர்நிலைகளை பாதுகாக்க, ஒவ்வொரு மனிதனும் முன்வர வேண்டும் எனவும் தன்னை போன்றே ஒவ்வொரு கிராமத்திலும் ஒருவர் இது போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Intro:சீர்காழி அருகே மழைநீரை கிணற்றில் சேமித்து மீண்டும் அதை சுத்திகரித்து நாளொன்றுக்கு 10 ஆயிரம் லிட்டர் வரை விலையின்றி பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி தாகம் தீர்த்து வரும் விவசாயி .கோடை வெய்யிலை எதிர்கொள்ள சீரகம்.வெந்தையம் கலந்த குடிநீரும் மழைகாலத்தில் மூலிகை குடிநீருடன் ஆரோக்யத்தையும் வழங்குகிறார்Body:நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காட்டை சேர்ந்தவர் காசிராமன்(43) சமூக ஆர்வலரான இவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் ஈர்க்கப்பட்டு, இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகிறார். தண்ணீரை பூமியில் தேடக்கூடாது வானத்தில் இருந்து கொண்டு வரவேண்டும் என்ற நம்மாழ்வாரின் வரிகளுக்கு ஏற்ப, மழைநீரை கிணற்றில் சேகரித்து வருகிறார். தற்போது கடும் கோடை வாட்டி வரும் நிலையில் பொதுமக்களுக்கு நாளொன்றுக்கு 10 ஆயிரம் லிட்டர் வரை விலை இல்லாமல் சுத்திகரிக்கபட்ட 24 மணிநேரமும் குடிநீர் வழங்கி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக இந்த சேவையை சத்தமின்றி செய்துவருகிறார். முதலில் ஒரு மண் பானையில் மட்டும் தண்ணீர் வைத்தவர், பொது மக்களின் தேவை கருதி தற்போது நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறார். மேலும் கோடை காலத்தில் வெப்பத்தில் இருந்து காத்து கொள்ள வெந்தையம்,கருஞ்சீரம் கலந்து குளிர்சியான தண்ணீர வழங்கும் காசிராமன் அதே போல் மழை காலங்களில் மூலிகை குடிநீரும் வழங்கி வருகிறார்.திருவெண்காடு சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர் உப்பாகி விட்ட நிலையில், பெய்யும் மழை நீரை தனது வீட்டின் கிணற்றில் அப்படியே சேகரித்து வைக்கிறார். அதனை மீண்டும் இயற்க்கை முறையில் குழாங்கல் மணல் பஞ்சி உதவியுடன், சுத்திகரித்து, தன் வீட்டு வாசலில் பந்தல் அமைத்து அனைவரும் இங்கு இலவசமாக வந்து தண்ணீர் எடுத்துச் செல்லலாம் என்ற அறிவிப்புடன் வினியோகம் செய்துவருகிறார். அப்பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள் குடிநீர் பாட்டில்களிலும், சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த கிராம மக்கள் குடங்களிலும் தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர். தனி ஒரு மனிதனாக சுற்றியுள்ள 10க்கும் மேற்ப்பட்ட கிராமங்களுக்கு இவர் வழங்கும் குடிநீரே பொது மக்களின் தாகத்தைத் தீர்த்துவருகிறது. மனிதர்கள் குளங்கள் குட்டைகள் போன்ற நீர் நிலைகளை பாதுகாக்காததன் விளைவாக தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது கடும் வறட்சியால் தண்ணீரின் தேவை அதிகாரித்து வருகிறது. இதனை போக்கும் விதமாக காசிராமன் தனது சொந்த இடத்தில் பெரிய அளவில் கிணறு ஒன்றையும் தோண்டி வருகிறார் அதன்மூலம் மழைநீரை அதிகளவில் சேகரித்து கடற்கரையோர கிராம மக்களுக்கு குடி தண்ணீரின் தேவையை முழுமையாக தினந்தோறும் வழங்குவதற்காக தனது சொந்தசெலவில் கிணற்றை உருவாக்கி வருகிறார்.இதுமட்டும் இல்லாமல் கிராம புறங்களில் பாழடைந்து கிடக்கும் கிணறுகளையும் சுத்தப்படுத்தி மழைநீரை சேமிக்கும் வகையில் தயார்செய்து வருகிறார். பறவைகளும் கால்நடைகளும் காசு கொடுத்தா? தண்ணீர் வாங்க முடியும் என்று கேள்வி எழுப்பும் காசி ராமன், வீட்டை சுற்றி மரங்களை வளர்ப்பதுடன், பறைவளுக்கும் தண்ணீர் வழங்குகிறார். மேலும் நீர்நிலைகளை பாதுகாக்க, ஒவ்வொரு மனிதனும் முன்வர வேண்டும் எனவும் தன்னை போன்றே ஒவ்வொரு கிராமத்திலும் ஒருவர் இது போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேட்டி:

01, காசிராமன் – இயற்கைவிவசாயி - திருவெண்காடு

02, தருமன் – மேலையூர்

03, லியோ – திருவெண்காடு

04, ராஜசேகர் - பூம்புகார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.