மலைவாழ் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஈரோடு வேலைவாய்ப்பு துறை மற்றும் புலிகள் காப்பகம் சார்பாக ஆசனூர் பகுதியில் நேற்று நடைபெற்றது. இதை மாவட்ட வன அலுவலர் குமுளி வெங்கட அல்லப்ப நாயுடு தொடங்கி வைத்தார்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஈரோடு, கோவை, சேலம், சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 16 தனியார் நிறுவங்கள் கலந்துகொண்டன.
அப்போது தனியார் நிறுவனங்களை சேர்ந்த அலுவலர்கள், மலைப்பகுதி இளைஞர்களிடம் விண்ணப்பங்கள் பெற்று தகுதியுள்ள இளைஞர்களை தேர்வு செய்தனர். இம்முகாமில் மொத்தம் 123 இளைஞர்கள் கலந்துகொண்டதில் 61 பேருக்கு வேலைக்கான உத்தரவு வழங்கப்பட்டது.
முகாமிற்கான ஏற்பாடுகளை தாளவாடி வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் செய்திருந்தனர்.