ETV Bharat / state

சீர்காழி அருகே சிலம்பம் சுற்றி பொங்கலைக் கொண்டாடிய சுட்டிக்குழந்தைகள் - Pongalittu celebration in Pulichakkadu village

சீர்காழி அருகே புளிச்சக்காடு கிராமத்தில் மாவீரன் சிலம்பாட்டக் கழகம் சார்பாக சமத்துவப் பொங்கல் திருவிழா நடைபெற்றது.

சீர்காழி அருகே சிலம்பாட்ட கழகம் சார்பாக சமத்துவ பொங்கல் திருவிழா

author img

By

Published : Jan 8, 2023, 8:15 PM IST

சீர்காழி அருகே சிலம்பம் சுற்றி பொங்கலைக் கொண்டாடிய சுட்டிக்குழந்தைகள்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த புளிச்சக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர், இயற்கை விவசாயி தினேஷ். இவர் தனது ஓய்வுநேரத்தில் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று, தன்னுடைய மாவீரன் சிலம்பாட்ட கழகம் சார்பாக, தமிழர் மரபுக் கலைகளை ஆர்வமுள்ளோருக்கு பயிற்றுவித்து வருகிறார்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட கரோனா தொற்று விடுமுறையில் ஏழை எளிய மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அந்தந்த கிராமங்களுக்கே சென்று சிலம்ப கலையை உண்மையான முறையில் இலவசமாக பயிற்றுவித்து வருகிறார்.

இந்நிலையில் மாவீரன் சிலம்பாட்டக்கழகம் மற்றும் பொதுநல அறக்கட்டளை இணைந்து புளிச்சக்காடு கிராமத்தில் சமத்துவ பொங்கல் திருவிழாவை கொண்டாடினர். சீர்காழியைச் சுற்றியுள்ள கீழச்சாலை, கேவரோடை, புத்தூர், கொள்ளிடம், பாதரக்குடி, முதலைமேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 300 சிலம்பாட்ட மாணவ, மாணவிகள், பெற்றோர் மற்றும் கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.

மேலும் காலை பொங்கல் வைக்கும் வைபவத்துடன் தொடங்கிய விழாவில் சிலம்பாட்டம், ஒற்றைக் கம்பு, இரட்டை கம்பு, புலியாட்டம், வாள்வீச்சு உள்ளிட்ட வீர விளையாட்டுகளும் ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாநில அளவில் வெற்றிபெற்ற சிலம்பாட்ட மாணவ, மாணவிகளுக்கு சீர்காழி காவல் துணை கண்காணிப்பார் லாமேக் பரிசு வழங்கி பாராட்டினர். இவ்விழாவில் அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலிட்டு மகிழ்சியுடன் கொண்டாடினர்.

இதையும் படிங்க:'ஜெயலலிதாவை கொன்றது மோடி தான்' - திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.