மயிலாடுதுறையில் தனியார் கட்டுமான நிறுவனமான பில்டிங் டாக்டர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் மே 1ஆம் தேதியையொட்டி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மேலைநாடுகளில் பிரபலமான மேனிக்யுன் சேலஞ்ச் என்ற தற்போது தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் கலையின்படி கட்டுமானப் பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் 125 பேர் தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சம உரிமையை உணர்த்தும் விதமாக பாதுகாப்பு உடைகளை அணிந்து, பணி உபகரணங்களை கையில் ஏந்தியவாறு 15 நிமிடங்கள் சிலை போல நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், பெல்ட் அணிந்தவாறு மரம் வெட்டும் ஊழியர், பாதுகாப்பு உடைகளை அணிந்து டிரில் செய்யும் ஊழியர், ஊழியரிடம் நட்புறவோடு பழகும் மேலாளர் மற்றும் பல்வேறு பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களைப் போன்று அசையாமல் 15 நிமிடங்கள் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், நிறுவன உரிமையாளர் ஆதன்யோகி மற்றும் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நடிகர் அஜித்குமார் பிறந்த நாள் - பிரபலங்கள் வாழ்த்து!