நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் சங்கம் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் ஸ்ரீராமதாஸ் தலைமை தாங்கினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கூறியதாவது, கஜா புயலின்போது இரவு பகல் பாராமல் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உழைத்தனர்.
ஆனால் அவர்களுக்கு அரசு உறுதியளித்தது போன்று நிரந்த பணி, ஊதியம் வழங்கவில்லை. இதற்கு சங்கத்தின் சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன். மேலும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல், அரசு ஒதுக்கிய நிதியை பல்வேறு பெயர்களில் கட்டணம் போட்டு கையாடல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜூன் மாதத்திற்குள் ஊதிய தொகையை வழங்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார்.