நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம், ஏர்வாடி பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவர் சேஷமூலை, ஏர்வாடி, இடையாத்தன்குடி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மின்வாரிய ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், மானாம்பேட்டை பகுதியில் மின்சாரம் இல்லாததால், பழுதை சரிபார்ப்பதற்காக வீரமணி மின்கம்பத்தில் ஏறியுள்ளார்.
அப்போது, சற்றும் எதிர்பாராத வகையில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே வீரமணி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த திட்டச்சேரி காவல் துறையினர், சடலத்தை மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.