மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய் (17). இவர் இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்த போது வைதீஸ்வரன் கோயில் கடைவீதி பகுதியில் வாகனத்தை திரும்பியுள்ளார்.
அப்போது பின்னால் வந்த கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் சேர்ந்த மின்வாரிய ஊழியர் தனசேகர்(45), சஞ்சய் வாகனம் மீது மோதியுள்ளார். இதனால் கீழே விழுந்த தனசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இவ்விபத்து குறித்து வைத்தீஸ்வரன் கோயில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'இட ஒதுக்கீட்டில் 20% வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வேண்டும்' - வன்னியர் சங்கத் தலைவர்