மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆயங்குடி கிராமத்தில், சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பயிரடப்பட்டிருந்து சம்பா நீரில் மூழ்கி சேதமானது.
இதை தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
வடகிழக்கு பருவ மழையால் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 13 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 41 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 90க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்தவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வத்திடம் தெரிவித்தினர்.
அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் பாதிக்கபட்ட பொதுமக்களுக்கு மளிகைப் பொருள்கள், அரிசி, போர்வை,பாய் உள்ளிட்ட நிவாரண உதவிகளையும் வழங்கினர்.
இதையும் படிங்க: மழை. வெள்ளம் - நிவாரண உதவிகள் வழங்கிய ஈபிஎஸ்