ETV Bharat / state

நான் நேரடி அரசியலுக்கு வந்த பின்   கட்சி வளர்ச்சியடைந்துள்ளது - துரை வைகோ - Union Minister Nirmala Sitharaman

நான் நேரடி அரசியலுக்கு வந்த பின் கடந்த 3 ஆண்டுகளில் கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 15, 2022, 7:20 AM IST

மயிலாடுதுறையில் உள்ள ஒரு திரையரங்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் 'மாமனிதன் வைகோ' என்ற ஆவணப்படம் நேற்று (அக்.14) திரையிடப்பட்டது. அத்திரைப்படத்தைப் பார்வையிட்டபின் அக்கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர், 'மதிமுகவின் வாக்கு வங்கியில் கடந்த 10 ஆண்டுகளில் சரிவு இருந்தது. இந்த இயக்கத்தில் சாதாரண தொண்டனாக 29 ஆண்டுகள் இருந்தேன். நான் நேரடி அரசியலுக்கு வந்த பின் கடந்த 3 ஆண்டுகளில் கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது. திமுகவுக்கு அடுத்ததாக தாங்கள்தான் என்ற பிம்பத்தை பாஜகவினர் உருவாக்குகின்றனர். பாஜகவுக்கு என்ன ஆதரவு உள்ளது? என்பது தேர்தல் நேரத்தில் தெரியும். திமுக ஆட்சி திருப்தியளிக்கும் வகையில் இருக்கிறது.

கட்சி தலைமை முடிவெடுக்கும்: எல்லா இடத்திலும் இருக்கும் ஓரிரு குறைகளை, பாஜகவினர் மிகைப்படுத்தி தவறான பிம்பத்தை உருவாக்குகின்றனர். திமுக அமைச்சர் கூறிய விதம் தவறாக இருக்கலாம். ஆனால், அதனை வெட்டி ஒட்டி இணையதளத்தில் வெளியிட்டு திட்டமிட்டு பாஜகவினர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவெடுக்கும்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உணவுப் பஞ்சம் ஏற்படும். அதனை எதிர்கொள்ள, மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். மத்திய அரசிடம்தான் அனைத்து நிதிகளும் உள்ளன. ஆனால், மத்திய அரசே இவ்வாறு கூறுவது நோயாளியிடம் மருத்துவரே, நீ சாகப்போகிறாய் தயாராக இருந்துகொள் என்று கூறுவதைப் போன்று உள்ளது என்றார்.

திமுக எம்எல்ஏ நிவேதா முருகன், காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டு திரைப்படத்தை பார்வையிட்டனர்.

'மாமனிதன் வைகோ' ஆவணப்படம் வெளியீட்டு விழா - துரை வைகோ பேட்டி

இதையும் படிங்க: ராஜராஜ சோழன் போன்று தான் முதலமைச்சர் ஸ்டாலின் - திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.