ETV Bharat / state

"அண்ணாமலைக்கு ஏற்ற கட்சி பாஜக அல்ல" - துரை வைகோ!

Durai Vaiko Speech: மயிலாடுதுறையில் மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் இல்ல விழாவில் பங்கேற்ற துரை வைகோ, பாஜக ஆட்சி மற்றும் அண்ணாமலை குறித்து பேசியுள்ளார்.

அண்ணாமலைக்கு ஏற்ற கட்சி பாஜக அல்ல - துரை வைகோ பேட்டி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2023, 10:35 PM IST

மயிலாடுதுறை: குத்தாலத்தில் மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் ஆசைத்தம்பி இல்ல விழாவில், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தென்னிந்தியாவின் உணவுக் களஞ்சியமாக விளங்கிய தஞ்சாவூர் மண்டலத்தில், விவசாயத்துக்கு தண்ணீரின்றி கடந்த 30 ஆண்டுகளில் பலமுறை வயல்கள் காய்ந்து, கருகி வருகிறது.

கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை வழங்காததால், காவிரி டெல்டா மாவட்டங்களில் 30 லட்சம் ஏக்கருக்கு மேல் இருந்த விளைநிலங்கள், தற்போது 15 லட்சம் ஏக்கருக்கும் கீழ் குறைந்துவிட்டது. தென்மேற்குப் பருவமழை பொய்த்துப் போனதால், வறட்சியான சூழல் நிலவும் இந்நேரத்தில் கர்நாடகா, தமிழகத்துக்கான தண்ணீரை வழங்காமல் வஞ்சிக்கிறது.

வறட்சியான சூழலிலும், விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்துக்கு தண்ணீர் தர உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியே கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், 4 மாதங்களுக்கு முன்பு வரை அங்கு ஆட்சியில் இருந்தது, பாஜகதான். 8 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக ஆட்சியில் இருந்தபோதும், தமிழகத்துக்கு சுமூகமாக தண்ணீர் வழங்கவில்லை.

கர்நாடக அரசு தமிழகத்தை வடிகாலாகத்தான் பயன்படுத்துகிறது. எப்போதெல்லாம் கர்நாடகாவில் அதிக மழை பெய்ததோ, அப்போது மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு கர்நாடகாவில் பாஜக எதிர்ப்பு தெரிவிக்கிறது. காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தில் திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் அரசியலைக் கடந்து தமிழக விவசாயிகளுக்கு தீர்வு காண வேண்டும்.

இது குறித்து மலிவான அரசியலை செய்ய வேண்டாம். தமிழக ஆளுநர் பாஜகவின் ஏஜென்டாக செயல்படுகிறார். தமிழகம் மட்டுமின்றி கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட இந்தியாவில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள், அம்மாநில கல்வி, அரசியலில் தலையிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தமிழகத்தில் கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் 1.06 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளது.

மத்திய அரசு தமிழ்நாடுக்கு போதிய நிதி வழங்காத நிலையில், திமுக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்த 75 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டிருப்பது பாத யாத்திரை அல்ல. அது பாவ யாத்திரை. ஐபிஎஸ் படித்த, நன்றாக உழைக்கின்ற இளைஞரான அண்ணாமலை, வலதுசாரி சிந்தனை உள்ள பாஜகவில் சேர்ந்தது, அவர் அண்மையில் அண்ணா குறித்து பேசியது உள்ளிட்ட அனைத்தும் ஏமாற்றம் அளிக்கிறது.

அண்ணாமலைக்கு ஏற்ற இயக்கம் பாஜக அல்ல. சனாதனம், இந்து மதம் இரண்டும் வெவ்வேறானது. உடன்கட்டை ஏறுதல், குழந்தைத் திருமணம், தீண்டாமை, குலத்தொழில், பெண்ணடிமை போன்ற சனாதனத்தின் கோட்பாடுகளையும், மூடநம்பிக்கைகளையுமே நாங்கள் எதிர்க்கிறோம்.

இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் குறித்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை” என்றார். இதில், மதிமுக பொருளாளர் மு.செந்திலதிபன், துணை பொதுச் செயலாளர் ரொஹையா, மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜகுமார், நிவேதா முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.