நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள பொன்வாசநல்லூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராத ஊராட்சி ஒன்றியத்தை கண்டிக்கும் விதமாக அப்பகுதி மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆனந்ததாண்டவபுரத்திலிருந்து சேத்தூர் வரையுள்ள 5 கி.மீ சாலை சரியில்லாதது கண்டித்தும், பொன்வாசநல்லூர் கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தராத ஊராட்சி ஒன்றியத்தை கண்டித்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். அத்துடன் 2018-19ஆம் ஆண்டிற்கான நிலுவை பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
தகவலறிந்து அங்கு விரைந்த வட்டாட்சியர் முருகானந்தம், அவர்களிடம் அமைதியான பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: ஒரு பைசா செலவில்லாமல் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை!