ETV Bharat / state

ட்ரோன் மூலம் காவிரிப் படுகை ஆய்வு!

author img

By

Published : Aug 22, 2019, 7:51 AM IST

நாகப்பட்டினம்: சிறிய ரக ஆளில்லா விமானம் மூலம், காவிரிப் படுகையில் உள்ள பாசனப் பகுதிகளில் பொதுப்பணித் துறை அலுவலர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஆளில்லா விமானம் மூலம் காவிரி படுகை ஆய்வு

மழை, வெள்ளம் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கும் பகுதியாக நாகை மாவட்டம் விளங்குகிறது. அதிக மழைப்பொழியும் காலங்களில் ஆறுகளில் தண்ணீர் அதிகளவு சென்று, பல இடங்களில் உடைப்பு ஏற்படுகின்றது. இதனால், விளைநிலங்கள், குடியிருப்புகள் நீரில் மூழ்கி, பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே காவிரி வடிநிலப்பகுதி, ஆற்றுப் பகுதி, தாழ்வான பகுதி, சேதமடையும் பகுதிகளை ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் பொதுப்பணித்துறை சார்பில் ஆய்வு செய்யும் பணி நேற்று தொடங்கியது.

அதன் ஒரு பகுதியாகக் குத்தாலம், தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில், மகிமலையாறு, கடலாழி, மஞ்சளாறு உள்ளிட்ட பகுதிகளில் ஆளில்லா விமானம் மூலம் ஆய்வுப்பணி நடைபெற்றது. இன்றும் இந்தப் பணிகள் தொடரும் என்றும், பாதிக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

டிரோன் மூலம் காவிரி படுகை ஆய்வு

ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு மேற்கொள்ளும் பணியினை, நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரதீப்குமார் நேரில் ஆய்வு செய்தார். மேலும், குடிமராமத்து பணிகளைப் பார்வையிட்ட அவர், கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேர்வதற்குள் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Intro:ஆளில்லா விமானம் ( டிரோன் ) மூலம், காவிரிப்படுகையில் உள்ள ஆறுகளின் பாசனப் பகுதிகளில் ஆய்வு:-Body:மழை, வெள்ளம் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கும் பகுதியாக நாகை மாவட்டம் விளங்குகின்றது. அதிக மழைபொழியும் காலங்களில் ஆறுகளில் தண்ணீர் அதிக அளவு சென்று, பல இடங்களில் உடைப்பு ஏற்படுகின்றது. இதனால், விளைநிலங்கள், குடியிருப்புகள் நீரில் மூழ்கி, பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. காவிரி வடிநிலப்பகுதியில், ஆற்றுப்பகுதியின், தாழ்வான பகுதி, சேதமடையும் பகுதிகளை, ஆளில்லா விமானம் மூலம் பொதுப்பணித்துறை சார்பில் ஆய்வு செய்யும் பணி இன்று துவங்கியது. அதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டம் குத்தாலம், தரங்கம்பாடி, தாலுகா பகுதிகளில், மகிமலையாறு, கடலாழி, மஞ்சளாறு, உள்ளிட்ட ஆறுகளில் பகுதியில் மேல்பரப்பில், ஆளில்லா விமானம் மூலம் இன்று ஆய்வுப்பணி நடைபெற்றது. நாளையும் இந்த பணிகள் தொடரும் என்றும், இது குறித்து ஆய்வு முடிவுகள் மூலம், பாதிக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு மேற்கொள்ளும் பணியினை, நாகை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி பிரதீப்குமார் ஐ.ஏ.எஸ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், குடிமராமத்து பணிகளை பார்வையிட்ட அவர், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேருவதற்குள் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவருடன் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.