ETV Bharat / state

‘எதற்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ற பக்குவம் கூட இல்லாதவர் அண்ணாமலை’ - கி. வீரமணி - கீ வீரமணி

எதற்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ற பக்குவம் கூட இல்லாதவர் அண்ணாமலை என மயிலாடுதுறை அருகே நடந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி விமர்சித்துள்ளார்.

Etv Bharat கி. வீரமணி
Etv Bharat கி. வீரமணி
author img

By

Published : Aug 21, 2022, 5:33 PM IST

மயிலாடுதுறை: குத்தாலத்தில் 100 வயதை கடந்த பெரியார் பெருந்தொண்டர் கொக்கூர் எஸ். கோவிந்தசாமிக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. திராவிடர் கழக மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், “பகுத்தறிவு என்பதே விஞ்ஞானம்தான். இப்போது, சில அரைவேக்காடுகள் திராவிட மாடல் ஆட்சியை கவிழ்த்து விடுவதாக கூறுகின்றனர். அரசியல் சட்டம் ஜாதி ஒழிப்புக்கு எதிராக உள்ளதாக தந்தை பெரியார் எதிர்ப்பு தெரிவித்தார். அதனை மாற்றுவதற்கு கால அவகாசமும் அளித்தார். ஆனால், அதன் பின்னரும் அதனை மாற்றாத காரணத்தால் அரசியல் சட்டநகல் எதிர்ப்பு போராட்டம் நடத்தினார்.

திராவிடர் கழகத்தில் 100 வயது கடந்த பகுத்தறிவாளர்கள் பலர் உள்ளனர். இவர்களில் யாரும் திருக்கடையூர் கோயிலுக்கு சென்று பூஜை செய்து வந்ததில்லை. கடவுள் நம்பிக்கையை நான் கொச்சைப்படுத்தவில்லை. சிந்தித்து செயல்பட வேண்டும். பகுத்தறிவாளர்கள் தான் அதிக வயது வாழ்கின்றனர். அறிவியல்தான் வயதை வளர்த்துள்ளது. பெரியம்மை, பிளேக், காலரா நோய்களை கடவுளுடன் தொடர்புபடுத்தி பேசினர்.

தற்போது கரோனா தொற்று உள்ளது. அப்போது கடவுளும்கூட கோயிலை விட்டு வெளியே வரவில்லை. அப்போது கடவுள் மனிதர்களை காப்பாற்றவில்லை. தடுப்பூசிதான் நம்மை காப்பாற்றியது. கரோனா‌ காலத்தில் வட மாநிலங்களில் கடவுளுக்கும் முகக்கவசம் அணிந்திருந்தார்கள். கடவுளுக்கும் அறிவியல்தான் நம்மை காப்பாற்றும். திராவிடர் கழகம் இல்லை என்றால் நாட்டில் குலக்கல்வி திட்டம் தான் இருந்திருக்கும்.

நம்மில் பலரது மகன்கள் பட்டதாரிகளாகவும், மருத்துவர்களாகவும், அறிஞர்களாகவும் இருந்திருக்க முடியாது. சமஸ்கிருதம் படித்தவர்கள்தான் டாக்டர்களாக, வக்கீல் களாக இருந்திருப்பார்கள். இப்போது நீட் தேர்வை நடத்துகின்றனர். ஒரு ஆண்டாவது நீட் தேர்வு ஊழல் இல்லாமல் நடந்திருக்கிறதா? அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வழி செய்வதுதான் திராவிட மாடல்.

இதில் பார்ப்பனர்களுக்கு கூட உரிய இட ஒதுக்கீடு கிடைக்கும். மூன்று சதவீத இட ஒதுக்கீட்டை பெற வேண்டிய பார்ப்பனர்கள் 97 சதவீதத்தையும் அபகரிப்பதையே திராவிட மாடல் எதிர்க்கிறது. அதிமுக தனது கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டது.

கி வீரமணி பேச்சு

ஆனால், தன்மானத்தோடு செயல்படுவது திராவிட மாடல் ஆட்சி நடத்தும் திமுக, அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் திராவிட இயக்கங்கள்தான். தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை எதற்கு ஆர்ப்பாட்டம் செய்வது என்ற பக்குவம் கூட இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். அண்ணாமலையால் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வளர முடியாது” என்றார்.

இதையும் படிங்க: அவசரநிலையில் அன்று பிடில் வாசித்தார் ரோம் மன்னன்... இன்று போட்டோ ஷூட் நடத்துகிறார் ஸ்டாலின்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.