ETV Bharat / state

இளைஞர்கள் ஒருங்கிணைந்து தூர்வாரும் வாய்க்கால்: ஆக்கிரமிப்புகளால் தடைப்படும் தூர்வாரும் பணி - land encroachment in nagai

நாகை: நில ஆக்கிரமிப்புகளால் வாய்க்காலை தூர்வாரும் பணி தடைப்படுவதாக மஞ்சக்கொள்ளை இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆக்கிரமிப்புகளால் தடைப்படும் தூர்வாரும் பணி

author img

By

Published : Jul 20, 2020, 9:38 PM IST

மேட்டூர் அணையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விட்ட நிலையில், நாகை மாவட்டம் புத்தூரையடுத்த மஞ்சக்கொள்ளை கிராம வாய்க்கால்களில் இன்னமும் தண்ணீர் வரவில்லை.
இங்கு 500 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்த பிரச்னையில் அக்கறை எடுத்துக் கொண்ட இளைஞர்கள் வாய்க்காலை தூர்வார முடிவுசெய்தனர்.

இளைஞர்கள் தங்களது சொந்த முயற்சியில் நிதி திரட்டி தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். பல ஆண்டுகளாக கழிவுநீர் வாய்க்காலாக மாறி இருந்ததை இப்போது காவிரி நீர் ஓடும் வாய்க்கால்களாக மாற்றி இருப்பதாக கூறும் இளைஞர்கள், வாய்காலின் பல பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.

சுமாராக 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 அடி அகலத்தில் இருந்த வாய்க்கால் தற்போது ஆக்கிரமிப்புகளால் 2 அடிக்கும் குறைவாக சுருங்கி விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்கால்களை தூர்வாரினால் தங்கள் பகுதியில் உள்ள பாய் குளம், செட்டி குளம் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும். குறிப்பாக, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இப்பகுதி மக்களுக்கு தண்ணீர் தேவை முழுமையாக பூர்த்தியடையும் என நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.

ஆக்கிரமிப்புகளால் தடைப்படும் தூர்வாரும் பணி

இது குறித்து அப்பகுதி இளைஞர் முகமது அசாருதீன் கூறுகையில், “இது தொடர்பாக பலமுறை ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு தூர்வாரும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வழிவகை செய்யவேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: ஏரியின் வரத்து வாய்க்காலைத் தூர்வாரும் பணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.