ETV Bharat / state

வாக்குச்சாவடி அலுவலர்கள் பதட்டமில்லாமல் பணியாற்ற வேண்டும் - evm machines

நாகப்பட்டினம்: வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் அலுவலகங்கள் பதட்டமின்றி நிதானமாக செயல்பட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தினார்.

வாக்குச் சாவடி அலுவலர்கள் பயிற்சி வகுப்பு
author img

By

Published : Apr 7, 2019, 11:14 PM IST

நாகை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத்தொகுதி வாரியாக, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பல்வேறு இடங்களில் இன்று இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

இந்நிலையில், நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட அஞ்சுவட்டத்தம்மன் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பயிற்சியை நாகை மாவட்ட ஆட்சியரும், மயிலாடுதுறை மக்களவைத்தொகுதி தேர்தல் அலுவலருமான சுரேஷ்குமார் பார்வையிட்டார்.

அப்போது அவர் பேசுகையில், ஏற்கனவே பல தேர்தல்களை சந்தித்திருந்தாலும், இம்முறை ஒப்புகைச்சீட்டு இயந்திரம் என்னும் வாக்குகள் சரிபார்க்கும் இயந்திரம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள் நிதானமாக பதற்றமின்றி பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், முதல் முறையாக தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், இந்தப் பயிற்சி வகுப்பினை பயன்படுத்திக்கொண்டு மின்னணு வாக்கு இயந்திரத்தை தைரியமாக கையாண்டு எந்த ஒரு அச்சமோ, சந்தேகமோ இல்லாமல் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதையடுத்து, பயிற்சியில் ஈடுபட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் மூலம் தங்களது வாக்குகளைப் பதிவிட்டனர்.

Intro:நாகை மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில், பணிபுரியும் அலுவலகங்கள் பதட்டமின்றி நிதானமாக செயல்பட மாவட்ட ஆட்சியர் அறிவுரை.

Body:நாகை மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில், பணிபுரியும் அலுவலகங்கள் பதட்டமின்றி நிதானமாக செயல்பட மாவட்ட ஆட்சியர் அறிவுரை.

வருகின்ற 18-ஆம் தேதி, நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, நாகை மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதி வாரியாக, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பல்வேறு இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற நிலையில், நாகை மாவட்டம், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்கு கீழ்வேலூரில் உள்ள அஞ்சுவட்டத்தம்மன் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.

இதனை பார்வையிட நாகை மாவட்ட ஆட்சியரும், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலருமான, சுரேஷ்குமார் வாக்குச்சாவடியில் பணி புரியும் அலுவலர்கள், ஏற்கனவே பல தேர்தல்களை சந்தித்திருந்தாலும், இந்த முறை, முதல்முறையாக வாக்காளர் யாருக்கு வாக்களித்தோம் என்பதை, அறிந்து கொள்ளும் விவி பேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், அதனால் வாக்குச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் பதட்டமின்றி நிதானமாக பணியாற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இதுவரை முன் அனுபவம் இல்லாது, முதல் முறையாக தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், இந்தப் பயிற்சி வகுப்பினை பயன்படுத்திக்கொண்டு எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினை, தைரியமாக கையாண்டு எந்த ஒரு அச்சமும் சந்தேகம்கமும் இன்றி பணிபுரிய வேண்டும் என அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடிகளில் பணிபுரிய இருக்கும் அலுவலர்கள், தங்கள் வாக்குகளை தபால் வாக்குகளாக பதிவு செய்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.